பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/340

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள்-புதிய_உரை 3.39 வறியவர் ஒருவர் வருகிறார். தன் வறுமையை வெளிப்படுத்தி உதவி கேட்கிறார். கேட்டவருக்கோ, கொடையாக ஒன்றைத்தந்து, வறுமைக்கு விடை கொடுத்துவிட வேண்டும் என்று விரும்புகிறார். அவரிடம் உள்ளது இல்லாமை மட்டுமல்ல. இயலாமையுங்கூட. இல்லாமையால் நொந்து போன உடலும் இயலாமையில் நைந்துபோன மனமும் ஒரு முடிவுக்கு வருகிறது. என்ன முடிவு? மனம் மெளனமாகி, ஊமையாகி விடுகிறது; ஊமையான மனம் உள்ளே அழுகிறது; உருகிக் கசிகிறது; உயிரைப் பிழிகிறது. கொடுமையாக இருக்கும். சாவு கூட ஒரு பரிகாரம் ஆகிவிடும். ஆனால், இவரின் மனமோ சாகாமல் செத்துக் கொண்டு, துடிக்கிறது. அந்த மனத்தின் ஊமை நிலை, மரண அவதியைவிடக் இந்தத் துடிக்கும் காட்சியைத் தான் வள்ளுவர் தில்லை என்றார். தில் என்றால் விழைவு. விழைவு என்றால் ஆசைப் பெருக்கம். ஆசைப் பெருக்குடன் இல்லாருக்கு உதவ, இயலாமல் போக, அவர் மனம் சாவின் விளிம்பில் சஞ்சாரம் செய்கின்ற துன்பநிலை. ஆகவே சாவில் சஞ்சலப் படுகிற மனம்தான் இருக்கும். ஆனால், ஈவதற்கு இல்லாமல் சங்கடப்படுகிற மனத்தின் வேதனையோ சாவின் கொடுமையைச் சிறிதாகக் காட்டுகிறது. ஈகை என்பதை ஈவதில் ஒழுக்கம் என்றோம். ஈயென்றால், ஈ, தேனி, வண்டு என்று பல பொருட்கள் உண்டு. வசதியற்ற வறியவர், தன் பசிபோக்க, பாழ்நிலை தீர்க்க, ஈ போல் பறப்பர். தேனிபோல் தேடித் திரிவர். வண்டு போல் வட்டம் இடுவர். இவர்கள் வள்ளல்கள் முகம் நோக்கி, கரம் பாரத்து மகிழும் வல்லாளர்கள். இவர்களுக்கு ஈய இல்லையென்ற ஒருநிலை வந்தால், இறப்புதான் சிறப்பான முடிவாக இருக்கும் என்று சிணுங்கிக், குலுங்கி, சித்தபிரமை கொண்டு ஊமையாகி அழுகிற உள்மனத் தின் மெளனம், உலகளாவிய ஒர் உருக்கமான காட்சி என்று ஈகை அதிகாரத்தை வள்ளுவர் எடுப்போடு முடித்திருக்கின்றார்.