பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/343

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


342 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 231. ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு பொருள் விளக்கம்: ஈதல் = இரந்தார்க்கு ஈந்து பகிர்ந்து கொடுத்துப் புரத்தல். இசைபட வாழ்தல் (ஏற்றத்தாழ்வின்றி) இணக்க முடன் வாழ்தல் அது இல்லை - அப்படிப்பட்ட செயல்கள் இந்தப் பிறப்பில், = உயிர்க்கு ஊதியம் = உயிராகிய ஆன்மாவிற்கு, பயனளிக்கும் வல்லது = வல்லமையை அளிக்கிறது சொல் விளக்கம்: ஈதல் = புரத்தல்; இசைபட = இணக்கமுற வல்லது = வல்லமை உடையது; ஊதியம் = பயன் இல்லை - இம்மை, இப்பிறப்பு, இந்த உலகம், இகபோகம் உயிர் = ஆன்மா, சீவன், பிராணவாயு. முற்கால உரை: வறியார்க்கு ஈக... அதனால் புகழுண்டாக வாழ்க. அப்புகழல்லது, மக்களுயிர்க்குப் பயன் பிறிதொன்றில்லை யாதலான். தற்கால உரை: வறியவர்க்குக் கொடுத்தலும், புகழுண்டாக வாழ்தலும், அல்லாமல், மாந்தர் உயிர்க்கு வளர்ச்சி வேறொன்றுமில்லை. புதிய உரை: இரந்தார்க்குப் பகிர்ந்து கொடுத்துக் காப்பதுடன், அவர்களுடன் இணக்கமாக வாழ்கிற செயல்கள் எல்லாம், இப்பிறப்பில், உயிராகிய ஆன்மாவுக்கு வல்லமையை வளர்த்துக் காத்து மேம்படுத்துகிறது. விளக்கம்: ஈதல் என்பது, கேட்டவருக்குக் கொடுத்தல் என்பதைவிட, பாதிக்கப்பட்டவரைப் புரத்தல். பாதுகாத்தல், பகிர்ந்தளித்தல் என்கிற போதுதான், ஈதலின் மேன்மை வெளிப்படுகிறது. இசைபட என்பதில், புகழ்கிற என்பதைவிட, இரந்து வந்தார்க்கு ஈந்து அனுப்புவதைவிட, அவரோடு இணக்கமாக இருக்கிறபோது, அவரது உடலும் மனமும் குளிர்கிறது. உடலால் கொடுத்தும், உள்ளத்தால் மடுத்தும் (நிறைத்தும்) பெறுகிற இன்பம் உடலைச் சந்தோஷப்படுத்துகிறது. மனத்தை