பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 345 அவரது மேல், அதாவது அவரது உடலில், அப்படிப்பட்ட அருஞ்செயல்கள், நிலையாய் நிற்கும்; நிலைத்து நிற்கும்; புகழாய் நிற்கும்; பொலிவாய் நிற்கும். தருபவர் உடலில் செயல்களும் புகழ்களும் நிலைத்து நிற்கச் செய்கின்ற ஈயும் தன்மை. அதன் பெருமையை அகிலமெங்கும் முழக்கமிடும். அதுதான் அளிப்பவர்க்கு அகிலம் தரும் அன்புப் பரிசு. இந்த அருஞ் செயலையே கொடை மடம் என்று புலவர் பெருமக்கள் போற்றிப் பரவுவர். வரையாது கொடுப்பதையே கொடை மடம் என்பர். அந்த செயலுக்கு உடலும் மனமும் ஒன்றி நிற்கும் உயராண்மைவேண்டும். அந்தப் பேராண்மை வழங்கும் வள்ளல் மேல் வானளாவி பரந்திருக்கும். முதல் குறளில், குறையாது கொடுப்பதால் ஆன்மா வலிமை பெறுகிறது என்றார். இரண்டாம் குறளில், உடல் பெருமை பெறுகிறது. உயர்ந்த செயல்களாற்றும் தகுதியைப் பெறுகிறது. 233. ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல் பொருள் விளக்கம்: ஒன்றா = (பகை பாராட்டிக் கொண்டு) பொருந்தாத உலகத்து = உலக மக்களிடையே அல் + ஆல் = மயக்கமும் நச்சுத் தன்மையும் நிலவியிருக்க உயர்ந்த புகழ் = மேலாண்மை மிக்க அருஞ் செயலானது பொன்றாது = அழிந்து போகாது நிற்பது = நிலைத்து நிற்பது ஒன்று இல் = ஒரு முகப்பட்ட இல்லறத்தால்தான் நடைபெறுகிறது. சொல் விளக்கம்: ஒன்றா = பொருந்தாமல் பகைக்கிற பொன்றாது = அழியாது; ஒன்று இல் உயர்ந்த இல்லறம் அல்லால் = மயக்கமும், நச்சுத்தன்மையும், அதிசயம். முற்கால உரை: தனக்கு இணையின்றாக, ஒங்கிய புகழல்லது, உலகத்து, இறவாது நிற்பது பிறிதொன்றில்லை.