பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/348

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 3:47 ஆத்மவலிமை சேரும் என்று முதற் குறளில், உடலும் மனமும் ஒருமுகப்படும் என் று இரண்டாம் குறளில், அழியாத புகழைப் பகைவரிடத்தும் நிலை நாட்டும் என்று மூன்றாம் குறளில், இல்லறச் சிறப்பையும் இணைத்துக் கூறுகிறார். 234. நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு பொருள் விளக்கம்: புத்தேள் உலகு = புதுமையை விரும்புகிற மக்கள் புலவரை = ஊன் மலையாக வாழ்கிறவர்களை போற்றாது = புகழ மாட்டார்கள் நில வரை = இந்த பூமியின் எல்லை அளவையும் விஞ்சுகிற

  • வண்ணம் நீள்புகழ் நெடுங்காலம் நிலைத்திருக்கிற அருஞ்செயலை ஆற்றின் = செய்கிறபோது தான் புகழும்.

சொல் விளக்கம்: நிலவரை - பூமியின் எல்லை ; நீள் = நெடுங்காலம் புல = ஊன்; வரை - மலை; புத்தேள் - புதுமை உலகு = மக்கள், உயர்ந்தோர். முற்கால உரை: ஒருவன் நிலவெல்லைக் கண்ணே பொன்றாது நிற்கும் புகழைச் செய்யுமாயின், புத்தேள் உலகம் அவனையல்லாது, தன்னை எய்தி நின்ற ஞானிகளைப் பேணாது. தற்கால உரை: நிலத்தளவும் நீண்டு பரவும் புகழ்ச் செயலை ஒருவன் செய்வானேயானால், புதிதாக வரும் உலகரும் அவனைப் போற்றுவாரேயன்றி, புலமையாளர்களைப் போற்றார். புதிய உரை: அதிசயம் மிகுந்த அற்புதமான புதுமையை விரும்புகிற, உலக மக்கள், பூமி அளவையும் விஞ்சுகிற, நெடுங்காலம் நிலைத்திருப்பது போன்ற அருஞ்செயலை ஆற்றுபவரைத்தான் போற்றிப் புகழ்வார்கள். ஊன்மலையாக உயிர் வாழ்கிறவர் களைப் பாராட் டவும் மாட்டார்கள்.