பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/349

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


348 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா விளக்கம்: நிலவரை நீள் புகழ் என்று வள்ளுவர் கூறியது, தேசம் கடந்து, காலம் கடந்து, நிலைத்து நிற்கும் புகழ். நீர்க்குமிழ் போலத் தோன்றி மறைவதல்ல. பன்னெடுங்காலம், பரவிக் கிடந்து பார்வைக்கு மலைப்பை ஏற்படுத்தும் மலைபோல, பாரெங்கும் பரவி நிற்கும் பெரிய செயலைச் செய்திட வேண்டும். அதுவே மனித உடல் எடுத்தோருக்குரிய மாபெரும் கடமை என்றார். அதைத்தான் நீள் புகழ் என்றார். நிலத்தின்மேல் நிலைத்து நிற்கும் மலை என்பதைத்தான் நிலவரை என்றார். அதற்கு எதிர்மறையாக மாமிச மலை என்று குறிக்க வந்த வள்ளுவர் மிகச் சாமர்த்தியமாக புலவரை என்கிறார். புல என்றால் புலவி. புலவு என்றால் ஊன். புலால் ஊன் LᏝ ᎶᎼ❍ ☾Ꮼ , மாமிசக் குன்று. சோற்றுப் பிண்டம். வெறும் காற்றுத்துருத்தி. இப்படிப்பட்ட மனிதரை யார் ஏற்றுக் கொள்வார்? போற்றி மகிழ்வார்? அதனால் தான் புலவரைப் போற்றாது என்றார். உலகு என்றால் மக்கள்; அதாவது உயர்ந்த மக்கள். உயர்ந்த மக்கள் என்பவர்கள். தினந்தோறும் புதுமையை விரும்புகிறவர்கள். அதிசயமான செயல் முறைகளை எதிர்பார்ப்பவர்கள். அற்புதமான நடைமுறைகளை நயப்பவர்கள். அவர்கள்தான் நெடுங்காலம் நிலைத்திருக்கும் வண்ணம் காரியம் ஆற்றுகிறவரைப் போற்றி மகிழ்வர். பாராட்டிச் சிறப்பு செய்வர். வணங்கித் துதித்து வாழ்த்துவர். நடமாடும் பிணம் போல, உண்டு உறங்கி, தின்று கொழுத்துத் திரிபவர்களுக்கு எந்தக் காலத்திலும் மதிப்பில்லை, மரியாதை இல்லை. அடலேறு போன்ற ஆண்மை மிக்க உடல், அருஞ்செயல் ஆற்றுகின்ற பண்பே, வாழ்பவர் என்பதற்குரிய இலக்கணம் என்று 4 வது குறளில் நயம் படத் தெளிவு படுத்துகின்றார். 235. நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது. பொருள் விளக்கம் : நத்தம் = இருள் சூழ்ந்த இரவில் போல் = (மூங்கில்) புதர் போன்றவற்றில்