பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*32 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 11. வானின்று உலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று பொருள்விளக்கம்: வான் = பெருமைமிகு, நிலைபெற்ற மழையும் கொண்ட உலகம் = ஆகாயமானது உலக உயிர்களுக்கு நின்று = எப்பொழுதும் வழங்கி = ஈந்து வருதலால் = தொடர்ந்து தந்து கொண்டிருப்பதால் -- அமிழ்தம்தான் = உள்ளும் புறமும் ம்ெய்ப்பித்து வரும் உவகையே என்று உணரற் பாற்று = தெளிவாக ஏற்றுப் பயன் பெறுக. சொல் விளக்கம்: வான் = பெருமைமிகு நிலைபெற்ற அமிழ்தம் = உள்ளும் புறமும் மெய்ப்பித்து வரும் உவகை. முற்கால உரை: மழை இடையறாது நிற்ப உலகம் நிலைபெற்று வருதலான் அம்மழைதான் உலகத்திற்கு அமிழ்தம் என்று உணரும் பான்மையை உடையது. தற்கால உரை: மழைபொழிந்து உலகிற்கு வேண்டும் நலங்களை வழங்கி வருதலால், அம்மழையே உலகிற்கு அமிழ்தம் என்று உண்ர்தற்கு உரியது. புதிய உரை: பெருமை, நிலைபேறு, மழை கொண்ட ஆகாயம் உலக உயிர்கட்கு அவற்றை எப்போதும் தொடர்ந்து தருவதால், உள்ளும் புறமும் மெய்ப்பித்து வரும் உவகையே என்று தெளிவுடன் ஏற்றுப் பயன் பெறுக. விளக்கம்: எதிர்பாராமல் பெய்கிற தூறலும், சாரலும் உலகை வந்து அடைகின்றன. மழையை வரவேற்றாலும், அதை மனதார ஏற்பதில்லை. பயன் பெற்று விடுவதில்லை. = மழையானது உலகுக்கு உணவாகிறபோது, உண்டாக்குகிற அகமகிழ்ச்சி. உணவை உண்டாக்கி, உடலை நன்றாக்குகிற போது