பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/353

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


352 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ஆக, நல்ல உடலும், நல்ல மனமும், ஆன்ம பலமும் உள்ள ஒருவரால் தான் அருஞ் செயல் ஆற்ற முடியும். வெற்றிவாகை சூடமுடியும். மேதையாக உலாவர முடியும். மேன்மை தன்மையில் மனித மனங்களைக் கவரமுடியும். எந்த ஆற்றலும் இலாதவர், அடிமையாக வாழ்வார்; அல்லது அறியாமையாலே ங்கிச் சாவார். இவர்கள் தங்களை வெளிப்படுத்த முயல்வதும், வீழ்ந்து படுவதும், வெட்கக்கேடான செயல் அல்லவா! அதனால்தான் வள்ளுவர் ஆணித்தரமாகப் பேசுகிறார். தோன்றாதே! தோன்றினால் துன்பம் தான்! ஆகவே, இறுதியாக ஒரு சொல்லைப் போட்டு, இந்தக் குறளை நிறைவு செய்கிறார். நன்று என்பதுதான் அந்தச் சொல். சுகம், நன்மை, சிறப்பு, வாழ்வு. என்று பொருள். வெளிப்பட முயன்று வேதனைப்பட்டால் சுகம் போய்விடும். உனது சிறப்பு சீரழியும். வாழ்வும் தாழ்வடையும். சுகமும் பாராமுகம் காட்டிப் போய்விடும். ஆகவே, எண்ணித் துணிக. தோன்றலின் தோன்றாமை எனும் விரதத்தைக் கடைப் பிடித்து வாழ்ந்து கொள் என்று வள்ளுவர் வாழ இயலாதார்க்கும் நல்ல வழிகாட்டி ஆற்றுப்படுத்துகிறார். 237. புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை இகழ்வாரை நோவ தெவன்? பொருள் விளக்கம்: புகழ்பட புகழ்பெற; வாழா - வாழ்வு நடத்தாத தார்தம்மை = பிடரி மயிர் போன்ற தன்னை தம்நோவார் = (தன் தாழ் நிலைக்காக) நொந்து கொள்ளமாட்டார் இகழ்வாரை = வீணாக வாழ்கின்ற தன்னை இகழ்பவர்கள் மீது நோவது எவன் - துன்புறுதல் எதற்காக? சொல் விளக்கம்: தார் = பிடரிமயிர், சிங்கக் கழுத்திலுள்ள சடை, உபாயம், நோவது துன்புறுதல்.