பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 33 Bā பெறுகிற புறமகிழ்ச்சி இரண்டும்தான் ஒருவற் குச் சாகும்வரை இன்பம் தருகிறது. அமிழ்தம் என்னும் சொல்லுக்கு அமுதம் என்பது பொருள். அ+முதம் எனப்பிரித்து, அ என்பதை அகச்சுட்டாம் முதம் என்பதற்கு மகிழ்ச்சி எனப் பொருள். உள்ளும் புறமும் மகிழ்ச்சியான சூழ்நிலையே அமுத நிலையாம். அதனால்தான் சாகும் வரை சாகா மருந்தாக மகிழ்வு தரும் அமிழ்தம் என்று உணர் என்றார். உவகையானவர்கள் உலகில் நெடுநாள் வரை நிம்மதியாக வாழ்கிறார்கள் என்பதை வள்ளுவர் முதல் குறளிலேயே முத்தாய்ப்பாகச் சுட்டுகிறார். 12. துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை. பொருள் விளக்கம்: துப்பார்க்கு = உண்பார்க்கு துப்பாய = உணவு ஆகி துப்பு ஆக்கி = உடலை வலிமைப் படுத்துகிறது. துப்பார்க்கு = அனுபவிக்கும் அறிவுள்ளார்க்கு துப்பாய = பொலிவு வலிமையுடன் தூய்மையான உடலையும் உண்டாக்குகிறது. துவும் மழை = தூய்மையாகப் பெய்கிற மழை. சொல் விளக்கம்: துப்பார் = உண்பவர், துப்பு = அறிவு, அனுபவம், உணவு, தூய்மை, நன்மை, பொலிவு, வலிவு; துப்புஆக்கி - என்பதே துப்பாக்கி ஆயிற்று, து =து என்றால் தூய்மை; உம் - ஒரு சிறப்புப் பொருள். முற்கால உரை: உண்பவர்க்கு நல்ல உணவுகளை உண்டாக்கி, அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாவது மழையாகும். தற்கால உரை: உண்பவர்க்கு வேண்டிய உணவுப் பொருளை உண்டாக்கி உண்பவர்க்குக் குடிநீர் என்னும் உணவாகி இருப்பதும் மழையேயாம்.