பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 361 மனிதர்களுக்குப் புலன்களால் பிறக்கும் உணர்வுகள். உணர்வுகள் உணர்த்துகிற அறிவுகள். அறிவுகள் பட்டுப் பட்டுத் தெளிகிற தெளிவுகள். இவற்றால் விளையும் ஞானங்கள். இவ்வாறு நோன் புகளை உள்ளடக்கிய விரதம், அவை சிந்தனையால், சொல்லால், செயலால் தூய்மை நிலையிலேயே தொடங்கி, தொடர்ந்து, நெறி நின்றிட வேண்டும். ஆக, மனிதனைப் புனிதனாக மாற்றுகிற தவக்கோலம், விரத கோலம், ஞானசீலம் எவ்வாறெல்லாம் இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர், தமது வாக்கு வன்மையால், வெளிப்படுத்துகின்றார். பீடை பிடித்தவனாக, நோய் படைத்தவனாகவே (கினிதன்) மனிதன் இருக்கிறான். அவனை மேன்மைப்படுத்திப் புனிதனாக்க வேண்டும் என்று பெருமுயற்சியை மேற்கொண்டு படைத்த துறவறவியல் குறள்களில், மனத்தின் மாசகற்றி, மேன்மைப்படுத்தும் முறைகளைக் கூறுகின்றார்.