பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/364

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 363 பேசவேண்டும் என்று நினைத்ததன் விளைவே, துறவற இயல் என்று தலைப்பைத் தந்திருக்கிறார். துறவறத்தின் இலக்கணம் தூய்மையான மனத்தில் எழும் அருள்தான், என்று திண்மைபடக் கூறுகிறார். துறவறத்தின் பெருமையே, இரக்க குணத்திலும், கருணை சொல்லிலும், கனிந்த முகத்திலும், காக்கும் தயவிலும், கண்ணியம் மிக்க நல்வினையிலும், காருண்யக் கொடையிலும்தான் இருக்கிறது என்றே துறவறவியல் என்றார். அருளுடைமெய் என்னும் முதல் அதிகாரம், அவனியில் பிறந்த உயிர்கள் அனைத்தும் சமமானவை. அவையெல்லாம் தெய்வத்தின் சாயல், மகேசனின் மறுபதிப்பு என்றெல்லாம் எண்ணுகிற அருள் மனம். அதனை செயல் படுத்தும் அன்புக் குணம் அவர்களை வழி நடத்தி வாழ்விக்கும் புனிதத்தனம். இப்படி எல்லா செயல்களுக்கும் ஆதாரமாக, அடிப்படையாக விளங்கும் அருளுடைமைதான், துறவறம் பூண்டவரின் தேமதுரத் தரிசனமாகக் காட்சி தரவும், மெய் மறக்கவும் செய்யும் என்ற உண்மையான உலகநடையை மிகவும் மேன்மையுடன் மெருகேற்றித் தந்திருக்கிறார்.