பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/366

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 365 செல்வம் என்னும் சொல்லைப் போட்டு வைத்தார். அதிலும் நான்கு இடங்களில் செல்வம் என்று குறிப்பிட்டுள்ளார். துறவறத்திற்குத் தேவை கருணை நிறைந்த வாழ்க்கை முறை வேண்டும். அந்த வாழ்க்கைதான் - செழிப்பைத் தரும். ஆக்கத்தைத் தரும். பெருக்கத்தைத் தரும். உரியவருக்கு இன்பத்தைத்தரும். துறவறத்தில் விருத்தியைத் தரும். ஆகவே, செல்வம் என்பது வாழ்க்கையையும், அந்த வாழ்க்கை வழங்கும் பெருமைகளையும் குறித்துக் காட்டுகின்றன. ஆனால், பொருட் செல்வம் - பூரியார் கண். அடுத்துப் பல சிந்தனைகளை ஏற்படுத்தும் சொற்களையும் தந்திருக்கிறார். கீழானவர்கள், கூடிய நல்ல உடல் கொண்ட வாழ்க்கையை நடத்துகின்றார்கள். உடல்தான் நன்றாக உள்ளது. அங்கே அருள் என்பது இல்லை என்கிறார். அதை உள என்பதன் மூலம், மெய்தான் என்றும் வலியுறுத்துகின்றார். நல்ல உடலில் நல்ல மனம் என்பதுதான் உண்மை. ஆனால் கீழ்த்தரமான மக்களிடம் கட்டுடல் இருக்கும். கவின் மிகுந்த உடலும் இருக்கும். தோற்றததில் அழகும் சிறப்பும் இருக்கும். ஆனால், அந்த உடல் நடத்தும் வாழ்க்கையில், அருள் இருக்காது. அறநெறி பிறக்காது. கொடுமைகளே குவிந்து கிடக்கும். அதனால்தான், பொருட் செல்வமாகிய நல்ல உடல் கொண்ட வாழ்க்கையமைப்பு, கீழானவரிடம் இருந்தும், அது அருள் பயப்பதாக இல்லை. அன்பு பாராட்டுவதாக இல்லை. மனிதம் ஒன்று தான். உடல் வள நிலையும் ஒன்றுதான். ஆனால் அங்கே அருள் விளைவதில் தான் வித்தியாசம் இருக்கிறது என்பதை, உயர்ந்தவர் உடலுக்கும், இழிந்தவர் உடலுக்கும் ஒப்புமை காட்டி வள்ளுவர் தெளிவு படுத்தியிருக்கிறார். 242. நல்லாற்றான் நாடி அருள்.ஆள்க பல்லாற்றான் தேரினும் அஃதே துணை பொருள் விளக்கம்: நல் - நல்குரவும் வறுமையும் மிகுந்த ஆற்றான் = வலியில்லாத தரித்திரனை நாடி = ஆராய்ந்தறிந்து (கண்டறிந்து)