பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/367

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


366 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அருள் ஆள்க கொடை வழங்கிக் காத்தருள்க பல்லாற்றான் பலவகைப்பட்ட முறைகளில் தேரினும் - ஆராய்ந்து பார்த்தாலும். அஃதே துணை அந்த அருட்தன்மையே ஆதரவாகும். சொல் விளக்கம்: நல் நல்குரவு, வறுமை, மிகுதி ஆற்றான் தரிந்திரன், வலியில்லாதவன்; நாடி - ஆராய்ந்து ஆள்க - வழங்குக, பணிவிடைசெய்க. முற்கால உரை: நன்றான நெறியிலே நின்று, நமக்குத் துணையாம் அறன் யாதென்று ஆராய்ந்து, அருளுடையாராக. எல்லா வாற்றானும் ஆராய்ந்தாலும், துணையாவது அவ்வருளே. பிறிதில்லை. தற்கால உரை: நல்ல வழிமுறைகளால் ஆராய்ந்து அருளைக் கொள்க. எத்தனை வகையாக ஆராய்ந்து பார்த்தாலும் அந்த அருளே துணையாகும. புதிய உரை: மிகுந்த வறுமையால் வாடுகிற வலிவில்லாதவரைக் கண்டறிந்து அவருக்கு உதவுக. அவ்வாறு வழங்குகிற கருணையும் கொடையும், எல்லா வகையிலும் சிறந்த துணையாகிக் காத்தருள்கிறது. விளக்கம்: நல்லாற்றான் என்ற சொல்லுக்கு எல்லா உரையாசிரியர் களுமே நல்ல நெறிகள் என்றே உரையெழுதியிருக்கின்றனர். நல் + ஆற்றான் என்பது நல்லாற்றான். நல் என்றால் வறுமை, நல்குரவு. ஆற்றான் என்றால் தரித்திரன். வறுமையாளன். அதனால் வலிமையில்லாதவன். அப்படிப் பட்ட வறுமையாளனைத் தேடிக் கண்டறிய வேண்டும். அதனை அடுத்து நாடி என்றார். ஒருவரது உடல் நலத்தைக் கண்டறிய, வியாதிகளின் தீவிரத்தின் விவரமறிய, நாடிப்பிடித்துப் பார்ப்பார்கள் மருத்துவர்கள்.