பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/369

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


368 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சொல் விளக்கம்: நெஞ்சினார் - மனச் சாட்சி உள்ளவர் இல்லை - சாதல், இம்மை; இருள் = அஞ்ஞானம், ஆணவமலம் இன்னா - ஆகாமை, வெறுப்பு, தீமை, இகழ்ச்சி உலகம் = மக்கள், குணம்; புகல் - உடம்பு, உடல், வெற்றி முற்கால உரை: இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல், அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கில்லை. தற்கால உரை: அருள் அமைந்த மனத்தவர்க்கு அறியாமை எனும் இருள் அமைந்த கொடிய உலகியலில் புகும் நிலை இல்லை. புதிய உரை: அஞ்ஞானமும் ஆணவ மலமும் கொண்டு, வெறுப்புடன் இகழ்கின்ற மக்களை வென்று, மேம்பாடும் உடல் பலம் கொண்டவராகத் துறவறம் பூண்டவர் விளங்குவதால், அவருக்கு நிலையான வாழ்வு உண்டு. சாதல் என்பதே இல்லையாகும். விளக்கம்: துறவறம் பூண்ட தூய நெஞ்சினார்க்குப் புகழால் சாதல் இல்லை. சாதல் இல்லை என்பதைத்தான் இல்லை என்று காட்டியிருக்கிறார். அவருக்கு யாரிடம் சாதல் இல்லாமல் நிலைத்த புகழோடு, நினைத்த காரியங்களையெல்லாம் முடித்து வெற்றி பெற்றிருக்கிறார்? இந்த உலக மக்களை. மக்கள் எப்படிப்பட்டவர்கள்? அறியாமை மிகுந்த அஞ்ஞானம். எதிர்ப்பட்டவர்களையெல்லாம். ஏளனப் படுத்தும் ஆணவ மலம். உன்மத்தம் பிடித்தலையும் மயக்கம். துன்பத்தைப் படுத்தும் துயர முயற்சிகள் கொண்டவர்கள்தாம் உலக மக்கள். இதில் சான்றோரும் அடங்குவர். அருள் சேர்ந்த நெஞ்சினர், இப்படிப்பட்டவர்களின் மனத்திலே புகுவது எளிதன்று. அப்படி நுழைகிறபோது, அருளாளர் வெற்றி பெறுகிறார். அந்த வெற்றி எதிர்ப்பாளர்