பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/37

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


34 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா o - - o- - புதிய உரை: தூவுகிற மழையானது தூய்மையாக இருப்பதால் அகமகிழ்வையும் வெளியுடலைத் தூய்மைப் படுத்துகிறபோது புறமகிழ்வையும் வழங்கி மகிழ்விக்கிறது. விளக்கம்: முதல் குறளில் அமுதம் என்று கூறிய சொல்லுக்கு இரண்டாவது குறளில் தெளிவு உண்டாக்கி இருக்கிறார். உடலுக்கு வடிவும், அமைப்பும், வாழ்வும் தருகிற மழை தொடர்ந்து வலிவும், பொலிவும், வனப்பும், எடுப்பும் வழங்குவதாக வான் மழையின் சிறப்பை மேலும் வள்ளுவர் வடித்துத் தருகிறார். 13. விண்நின்று பொய்ப்பின் விரிநீர் வியன்.உலகத்து உள்நின்று உடற்றும் பசி பொருள் விளக்கம்: விண் = விண் கொடையான மழை நின்று பொய்ப்பின் = எப்போதும் பெய்யாது தவறினால் விரிநீர் = விரிந்த கடல்பரப்பு. வியன் உலகம் = பெருமை மிக்க நிலவுலகம், அதில் வாழும் உயிரினங்கள். உள்நின்று = உள்ளங்களிலுள்ள மனவெழுச்சியிலும் பசி= வறுமை உடற்றும் = வருத்தி சிதறடித்து அழிக்கும். சொல் விளக்கம்: நின்று = எப்போதும்; விரிநீர் = விரிந்து பரந்த கடல் வியன் = பெருமையும் வேறுபாடுகளும் உலகம் = உலகமும், உலக மக்களும் உள் = உள்ளம், மனவெழுச்சி, உள்ளிடம் உடற்றும் = அழிக்கும் சிதறடிக்கும், வருத்தும் பசி = வறுமை, உணவு வேட்கை, தீ. முற்கால உரை: * மழை வேண்டும் காலத்துப் பெய்யாது பொய்க்குமாயின், கடலால் சூழப்பட்ட அகன்ற உலகத்தில், பசி நிலைபெற்று உயிர்களை வருத்தும்.