பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 369 களின் இதயத்திலே புகும் வெற்றி. உடலை இணங்க வைக்கும் வெற்றி. அதைத்தான் வள்ளுவர் புகல் என்று குறித்தார். _மக்கள் மனத்திலே புகுந்து வெற்றி கொள்கிற உடல் வளத்தை வள்ளுவர் மூன்றாவது குறளிலும் காட்டி மகிழ்கிறார். உடல் வளத்தால், ஆன்மபலத்தால், அவர் அஞ்ஞானிகளிடையே பெறுகிற வெற்றி, அவரை உயர்த்தி வைக்கிறது. உள்ளங்களில் நிறுத்தி வைக்கிறது. உயிரோடு இருக்கும்போது, எதிரில் வாழ்கிறார். இறந்த பிறகும், மற்றவர்கள் நினைவில் வாழ்கிறார். என்றும் அவருக்கு இறப்பு இல்லை. சிறப்புதான் என்று கூறி, துறவிகளின் பெருமையை 3 வது குறளில் மேன்மைப்படுத்திக் கூறுகிறார். 244. மன்உயிர் ஓம்பி அருள்.ஆள்வார்க்கு இல்என்ப தன்.உயிர் அஞ்சும் வினை. பொருள் விளக்கம்: மன்னுயிர் = தன்னுடைய சீவனாகிய ஆத்மாவை ஒம்பி = தீதுவராமற் பாதுகாத்து, அருள் ஆள்வார்க்கு = நல்வினைகளை ஆற்றி வருபவருக்கு தன் உயிர் = தன்னுடைய சீவாத்மாவானது அஞ்சும் வினை = பயப்படுகின்ற பொல்லாச் செய்கைகளை இல்என்ப = இல்லாமல் செய்து வாழ்வார்கள். சொல் விளக்கம்: மன்னுயிர் = ஆத்மா, சீவன்; ஒம்பி = தீது வராமல்; காத்து = மனத்தை ஒருக்கி, வளர்த்து வினை = பொல்லாங்கு செய்கை. முற்கால உரை: நிலைபேறுடைய உயிர்களைப் பேணி. அவற்றின் கண் அருளுடையனாவானுக்கு, தன்னுயிர் அஞ்சுதற்கு ஏதுவாகிய தீவினைகள் உளவாகாவென்று அறிந்தோர் சொல்லுவர். தற்கால உரை: உலகத்து உயிர்களையெல்லாம் பேணி, அருள் ஒழுக்கம் கொண்டவனுக்குத், தன் உயிர் குறித்து, அஞ்சுவதற்குரிய தீய செயல்கள் உண்டாகா என்று தெளிந்தோர் கூறுவர்.