பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/372

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 371 தன் மன்னுயிரை ஒம்புவோர்தான், அருளாளராகத் திகழ முடியும், மகிழ முடியும் என்று 4 வது குறளில், நறுக்குத் தெறித்தார்போன்ற, சீவாத்மாவின் சிறப்பைக் கூறியிருக்கின்றார். 245. அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கு மல்லல்மா ஞாலம் கரி. பொருள் விளக்கம்: வளிவழங்கு உடலில் வாழ்கின்ற உயிர்க்காற்று அளிக்கும் மல்லல் = (மன) வலிமையும் கரி = வயிரம் போன்ற உடலையும் மா - அழகையும் ஞாலம் = கொண்டு உயர்ந்தோராவதால், அருள் ஆள்வார்க்கு = நற்செயல் மிக்க மேலோர்களுக்கு அல்லல் இல்லை - துன்பமே இல்லை. சொல் விளக்கம்: aici) = 2 usikołóair Q)(55(5lb situs (Vital Air in the System) மல்லல் = வலிமை; மா = அழகு, மேன்மை, பெருமை. ஞாலம் = உயர்ந்தோர்; கரி - வைரம், சாட்சி முற்கால உரை: அருளுடையார்க்கு இம்மையிலும் ஒரு துன்பம் உண்டாகாது. அதற்கு காற்று இயங்குகின்ற வளப்பத்தை உடைய பெரிய ஞாலத்து வாாழ்வார் சான்று. தற்கால உரை: அருளைப்போற்றி, நடப்பவர்க்குத் துன்பம் எதுவுமில்லை. இதற்குக் காற்று விசிறுகின்ற வளப்பமிக்க, இந்தப் பெரிய உலகத்து வாழ்ந்த பெருமக்களே சான்று. புதிய உரை: உடலிலே உலாவரும் உயிர்க்காற்று அளிக்கின்ற மனவலிமை, வைரம் போன்ற அழகான உடல், அதனால் உயர்வு பெற்றிருக்கும் உயர்ந்தோரான அருள் ஆள்வார்க்கு மெய்வருத்தம், மனவருத்தம் போன்ற எதுவுமே வாழ்க்கையில் வராது.