பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.376 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா பொருள் என்றாலும், பொருளைப் பற்றியே நினைத்தாலும் கூடத் துன்பம் என்று தான் எல்லாக் கவிஞர்களும் பாடியுள்ளனர். H + i E. H = - - i so + அனைவரின் அனுபவங்களும் அப்படித்தான் அமைந்திருக்கின்றன. இன்னல் தரும் பொருளை ஈட்டுதலும் துன்பம். பின் அதனைப் பேணுதலும் துன்பமே. அன்னது அழித்தலும் துன்பம். அதனைப் பிறர்பால் இழத்தலும் துன்பம். ஆக, பொருள் என்பது துன்பத்தைப் புரட்டிக் கொண்டு வரும் தூதுவன் என்றே சொல்லலாம். பொருள் என்பதற்கு நான் உடல் என்று பொருள்கூறி இருக்கிறேன். பொருளாகிய, உலகத்தின் முதல், உன்னத உடல் நலமானதாக இல்லையேல், அப்பொழுதே இந்த உலக வாழ்க்கை அழியத் தொடங்குகிறது. அதாவது மரணம் சம்பவித்து விடுகிறது. மரணம் என்றால் சாவு அல்ல. இறப்பு அல்ல. வாழ்ந்து கொண்டே அனுபவிக்கிற சித்ரவதை. ம என்றால், நேரம், நஞ்சு, காலம், எமன் என்று அர்த்தம். இரணம் என்றால் காயம். உணவு போர் என்று அர்த்தம். நல்ல உடல், இல்லாவிட்டால், இந்த உலகில், காயத்தோடு போராட வேண்டியிருக்கும். உயிரைக் கவரும் எமனுக்கு உணவாகிவிட வேண்டியிருக்கும். அதைத்தான் இல்லாகி என்றார் வள்ளுவர். ஆங்கு என்றால் அப்பொழுதே என்று அர்த்தம். உடல் நலம் கெட்ட உடனேயே, உடலின் மரணம் தொடங்கிவிடுகிறது. மரணமானது உடம்பின் சத்தைக் குறைத்துக் கொண்டுவருகிறது அப்படிச் சத்துபோகும்போதுதான், செத்துப் போகின்றார்கள். ஆகவே, பொருளில் லாதவர், L[) {T(6SNSI வேதனை அனுபவிக்கும் அல்லலில் துடிக்கும் போது, அறிவோ, அன்போ, அடுத்தவர் மேல் இரக்கமோ, கடமையோ, கருணையோ எப்படி ஏற்படும்? ஆகவே, அவர்களுக்கு நல்லவர்கள், வல்லவர்கள், உயர்ந்தோர்கள் கூடியுள்ள இடத்தில் இடமில்லைதான். வாழ்கிற சூழ்நிலையிலும் வாழ்வு இல்லை. எனவே, பொருளை ஒம் புங்கள் என்று தனது 7வது குறளில் வள்ளுவர் வற்புறுத்துகின்றார்.