பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 377 248. பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார் மற்றாதல் அரிது. பொருள் விளக்கம்: அருளற்றார் = கருணையில்லாத மனதுக்கு உரியவர்கள் கூட பூப்பர் ஒரு கால் = தெளிவு பெற்றவராக ஒருவேளை மலரலாம் பொருளற்றார் - (ஆனால்) நல்ல உடல் வளம் அற்றவர் அற்றார் = இறந்தார் போல, வறுமையாளர் ஆவார். மற்றாதல் அரிது - முன்போல, அவர் நல்ல உடல் நலம் உள்ளவராய் வரவே முடியாது. சொல் விளக்கம்: பூப்பு - பூத்தல், உண்டாதல், மலர்தல் அற்றார் = இறந்தவர், தரித்திரர், வறுமையாளர். முற்கால உரை: ஊழான் வறியராயினார் அது நீங்கிப் பின் ஒருகாலத்துச் செல்வத்தாற் பொலிவர். அவ்வாறன்றி, அருளில்லாதார் பாவம் அறாமையின் அழிந்தாரே. பின்னொரு காலத்தும் ஆதலில்லை. தற்கால உரை: தம் பொருளை இழந்து போனவர், ஒரு காலத்தில் தாம் இழந்த பொருளைப் பெற்று, பொலிவடையவும் கூடும். ஆனால் அருளை இழந்தவர் இழந்தவரே. அதனை மீள அடைதல் அரிதாகும். புதிய உரை: அருளிழந்து போனவர், ஒருவேளை, கருணை மனத்தை வளர்த்து மீண்டும் கடமையாற்றக் கூடும். ஆனால், நல்ல உடல் வளத்தை அழித்தவர், இறந்தவர் போல் வறுமையடைந்து போகிறார். அவரால் மீண்டும் முன்போல, நல்ல உடல் பெற்று சிறப்பாக வாழவே முடியாது. விளக்கம்: பொருளற்றார் பூப்பர் ஒருகால் என்பது, மிக சாதாரணமானதொரு நடைமுறை. ஆறிடும் மேடு மடுவும்போல் ஆம் செல்வம். செல்வம் வரும் போகும். அதனால் வாழ்வுக்கு மாற்றம் ஏற்படுமே தவிர, முயற்சித்தால், மீண்டும் செல்வத்தைப் பெற்று விடலாம்.