பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/380

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய_உரை 379 - - கண்டற்றால் = உணர்ந்து கொண்டால், * தேரின் மேலும் அந்த தெளிவில் ஞானம் பெற்று, அருள் ஆதன் - அருள் மிகுந்த ஆத்மாவிற்கு செய்யும் அறம் = ஒழுக்கமாக காரியங்களையெல்லாம் செய்து காப்பான் சொல் விளக்கம்: ஆதன் = ஆத்மா, உயிர், குரு, அறிவிலி, அறிவிலான் தெருளாதான் = அறிவிலி, தெருள் = தெளிவு, ஞானம், தெளி முற்கால உரை: உயிர்க்கண் மாட்டு அருள் செய்யாதவன் செய்யும் அறத்தை ஆராயின், ஞானமில்லாதவன் ஒருகால் மெய்ப்பொருளை உணர்ந்தாற் போலும். தற்கால உரை: அருள் பேணாதவன் செய்யும் அறச் செயலை ஆராய்ந்து பார்த்தால், அது தெளிவில்லாதவன் மெய்யான பொருளைக் கண்டது போன்றதாகும். புதிய உரை: அறிவில்லாத ஒருவன் தன் உடம்பைப் பற்றிய மெய்நிலையை அறிந்து கொண்டால், பெற்ற அந்த ஞானத்தால், தன் உடலில் உள்ள அருள் ஆத்மாவை மேம்படுத்த, மிகுந்த ஒழுக்கத்துடன் பேணிக் காப்பாற்றுவான். விளக்கம்: மெய்ப் பொருள் என்றது உண்மையான பொருளாகிய உடம்பினை. உடம்பினுக்குள்ளே உறுபொருள் கண்டேன். அதனால் உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்றார் திருமூலர். உடம்பெனும் மெய்ப்பொருள் உடம்பிற்குள்ளே உறுபொருள் என்பது அறியாதவனைத் தெருளாதான் என்றார். ஆதான் என்ற சொல் அகராதிகளில் இல்லை. ஆதன் என்று தான் இருக்கிறது. ஆதன் என்கிறபோதும், குறளின் பொருள் மாறவில்லை. தெருள் ஆதன் எனப்படும் தெளிவில்லாத அறிவிலி. அவன் மெய்ப் பொருளாகிய உடலின் மேன்மையை உணர்ந்து கொள்கிறான். மேலும் அவன் அந்த ஞானத்தில், தேருகிறபோது, அவன் உடலுக்குள்ளே உறுபொருளான ஆத்மாவை அறிகிறான்.