பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/382

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 381 முற்கால உரை: அருளில்லாதவன் தன்னின் எளியார் மேல்தான் நலியச் செல்லும் பொழுது. தன்னின் வலியார் தன்னை நலிய வரும் பொழுது. அவர் முன் தான் அஞ்சி நிற்கும் நிலையினை நினைக்கவும். தற்கால உரை: ஒருவன் தன்னிலும் வலிமை குறைந்தவனைத் தாக்கச் செல்லும் போது, தான் தன்னைப் பார்க்கிலும் வலிய ஒருவன் முன்நிற்கும் நிலையுண்டானால், எப்படி இருக்கும் என்பதை நினைப்பானாக! புதிய உரை: தன்னை விட வலிமையானவராக இருந்தாலும், தன்னை விட மெலியவராக இருந்தாலும், அவர் தன்னுடைய ஆத்மா போன்றவர்தான் என்று நினைப்பது தான், அருளுடைமை ஆகும். விளக்கம்: துறவறம் பூணுகிற ஒருவருக்கு, தேகம்தான் ஆதாரம். தேகத்தின் திடமும், மனதின் மயக்கமிலா குணமும், ஆத்மாவின் ஆற்றல் மிகு சக்தியும் சேர்கிறபோது தான் துறவறம், அதன் பெருமையைப் பெறுகிறது என்று கருதிய வள்ளுவர், அருளுடைமைதான், துறவறத்தின் ஆரம்பப் பாடம் என்று அறிவிக்கிறார். அருளுடைமையே வாழ்க்கையில் எல்லாம் அற்புதமான வாழ்வு தரும் செல்வம் (வாழ்க்கை) என்று தொடங்கி, கருணை மனம், கடமை, குணம் இவற்றோடு, யாரையும் வெறுக்காத பண்பாண்மை வேண்டும் என்று தொடர்ந்து, பொருளாகிய உடலே அருளுக்கு ஊற்று என்று முத்தாய்ப்புடன் மொழிந்து, கடைசிக் குறளில், அருளுடைமை எப்படி உயிர் பெறும் என்று மிகத்தெளிவாக ஆறறிவு கொண்ட எந்த மனிதராக இருந்தாலும், எளிதாகப் பின்பற்ற முடியும் என்னும் இலக்கணத்தை, இலக்கியமாக்கித் தந்திருக்கிறார். எதிரிலே இருப்பவர் வலியவராக இருந்தாலும் சரி, கொடியவராக விளங்கினாலும் சரி, வறியவராக இருந்தாலும் சரி, Ҹ)