பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/386

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 385 251. தன்னுன் பெருக்கத்திற்குத் தான்பிறி தூன்உண்பான் எங்ங்னம் ஆளும் அருள்? பொருள் விளக்கம்: தன்னுான் = தனது உடல் தசைகளை பெருக்கத்திற்கு = அதிகப் படுத்தி பருக்க வைப்பதற்காக, பிறிதுன் உண்பான் = பிற உடலின் தசைகளை உண்பவனுக்கு எங்ஙனம் = எவ்வாறு தான் அருள் ஆளும் - அவன் ஆத்மா, அருளை (அடிமைப்படுத்தி) ஆட்சி செய்யும்? சொல் விளக்கம்: பெருக்கல் = அதிகப்படுத்துதல், பருத்தல் ஆளும் = அடிமைப்படுத்தும்; ஆட்சி செய்யும். தான் (self) ஆத்மா முற்கால உரை: தன் உடம்பை வீக்குதற் பொருட்டுத் தான் பிறிதோருயிரின் உடம்பைத் தின்பவன் எல்வகையான் அருளினை நடத்தும்? தற்கால உரை: தன் உடம்பைப் பருக்க வைப்பதற்காகத்தான், மற்றோர் உயிரைப் போக்கி, அதன் உடலை உண்பவன், எவ்வாறு அருளைக் கடைபிடிப்பவன் ஆவான்! புதிய உரை: தன் உடல் தசைகளைப் பெருக்க, பிற உடலின் தசைகளை உண்பவன் ஆத்மாவானது எவ்வாறு அருளை ஆட்சிசெய்யும்? அடிமையாக்கி வழி நடத்தும் விளக்கம்: மிகவும் எளிதான, அருமையான பொருள் நிறைந்த குறள் இது. பிற உயிரின் உடல் தசைகளை உண்பவன், தனது வாய்ச் சுவைக்காக, நாவிற்காக, பழக்கத்தை விடமுடியாத இச்சைக்காக, உண்கிறான். அவன் மாமிச உணவை உண்கிறபோது, அவனது மனம் மகிழ்ச்சி கொள்கிறது. உடலும் உற்சாகம் கொள்கிறது. இந்த நிலையில் அவனது மனத்தையும், உடலையும் ஆற்றுப்படுத்துகிற ஆத்மா, மகிழ்கிறதா? உற்சாகம் கொள்கிறதா என்றால், சாதாரண மாந்தருக் கெல்லாம், உடல் வேட்கையும் மன வெறியும் சாட்டையாக ஆத்மாவைச் சுற்றி விடுகிறபோது, ஆத்மாகான்