பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

386 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அங்கே அடிமையாகி விடுகிறது. கோலெடுத்துக் குரங்காட்டும் குரங்காட்டி போல, மனமும் உடலும், ஆத்மாவின் மார்க்கத்தையே மாற்றிவிடுகின்றன. - உடல் பலம், மனபலம் என்பதைவிட, ஆத்மபலம் தான் அதிக ஆற்றல் மிகுந்தது. ஆத்மா தான் மனத்தை நிலைப்படுத்த வேண்டும். உடலை வழிப்படுத்த வேண்டும். ஆத்மா பலமற்றுப் போகிறது. அங்கே மனிதத்தனம் தான் வெற்றி கொள்கிறது. மலர்ச்சி மிக்க புனிதத்தனம் பின் வாங்கி ஒளிந்து கொள்கிறது. அதனால் தான், தன்னுன் பெருக்கற்கு பிறிதுன் உண்பான் என்று வள்ளுவர் சொல்லாமல், தான் என்ற ஒரு சொல்லைத் தனியாகக் கூறியிருக்கிறார். தான் என்பது One's self என்று அகராதி பொருள் கூறுகிறது. Self என்பதற்கு, அகநிலைப் பண்பு, அகநிலைக் கூறு, உள்ளுயிர் தன்மை, ஆன்மா என்று பலபொருட்கள் இருக்கின்றன. பிற உயிரின் உடல் தசைகளை ஏற்று, விரும்பி உண்ணுகிற ஒருவரின் ஆன்மா, எப்படி அருளை ஆளும்? வளர்க்கும். ஒருவரின் அருளானது, எப்படி ஆன்மாவுடன் ஐக்கியமாகும்? ஆதனால்தான், தான் என்ற சொல்லைத் தந்து, குறள்பாவின் இறுதியில், கேள்வியையும் எழுப்பியுள்ளார். ஆன்மா இல்லாமல் அருள் இல்லை. அருள் கலந்த ஆன்மாவே, துறவறத்திற்குத் துணையென்பதை, புலால் மறுத்தலில் முதல் குறளில், முடிவுபட எடுத்துரைக்கிறார். 252. பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு பொருள் விளக்கம்: பொருள் ஆட்சி = உடல் வலிமையை, ஆண்மையை போற்றாதார்க்கு = காத்து, வணங்கி, வளர்க்காதவருக்கு இல்லை= உடலுக்கு கேடுகளே உண்டாகின்றன ஊன்தின்பவருக்கு = பிற உயிர் உடல் தசைகளை உண்பவருக்கு அருள் ஆட்சி - கருணையை வளர்க்கும் கடமையும் முயற்சியும் ஆங்கில்லை - அப்பொழுதே அழிந்து போகிறது.