பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா வளர்க்காதவருக்கு, வலிமை குறையும். ஆண்மை மறையும். மேன்மை அழியும். கேடுகள் நிறையும். உறுப்புக்கள் உலர்ந்து சாயும். உணர்வுகள் பொன்றி மாயும். உடலின் அழகு தேயும். இவற்றையெல்லாம் குறிக்கத்தான் இல்லை என்னும் சொல்லால் குறித்துக் காட்டினார். அதுபோலவே அருள் ஆட்சி என்றார். ஆன்மாவில் அருள் ஆளவேண்டும் என்றால், கருணை வேண்டும். நல் வினை வேண்டும். இரக்கம், தயவு வேண்டும். கிருபையை மிகுவிக்கும் கட்டளை வேண்டும். ஊன் உண்பவருக்கு, ஆத்மா அடங்கிப்போகிறது. மனம் மங்கிப்போகிறது. உடல் ஒடுங்கிப்போகிறது. அப்புறம் எங்கே அருள் ஆட்சி செய்யும்? அதனால் தான் ஆங்கில்லை என்றார். ஊன் தின் கிற போதே, ஆன்மாவிலே இடம் தேடிப்பிடித்திருக்கும் அருள் எல்லாம், அப்பொழுதே அழிந்து போகிறது. குறைந்து போகிறது. மறைந்து போகிறது. உலர்ந்து காய்ந்து, ஒழிந்து போகிறது என்கிறார் வள்ளுவர். உடலைக் காப்பதன் மூலம் உயர்வுகள் நிறைகின்றன. அருளைக் காப்பதன் மூலம் ஆன்ம அருள் நிறைகின்றது என்று 2வது குறளில், அருளிள் இணையிலா பெருமையானது. ஆண்மை மிக்க உடலில்தான் வெளிப்படுகிறது என்று சூட்சுமத்தைச் சொல்லுகிறார். 253. படைகொண்டார் நெஞ்சம்பிேல் நன்றுஊக்கா தொன்றன் உடல்சுவை உண்டார் மனம். பொருள் விளக்கம்: ஒன்றன் = பிறிதோருயிரின் உடல் சுவை = தசைகளின் மேல் கொண்ட ஆசையுடன் உண்டார் மனம் = உண்டவர் மனமானது, படை நன்று = தூக்கமே சுகமானது என்பார். கொண்டார் நெஞ்சம் - அப்படித் தூக்கம் கொண்டவரது நெஞ்சமானது போல் = (நெஞ்சம்) புதர்சூழ்ந்த மலைக்குகை போன்று ஊக்காது = எழுப்பாது, சிந்திக்கச் செய்யாது, உற்சாகமும் படுத்தாது.