பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அல்லது யாது என்கிறார் வள்ளுவர். அல்லது என்பதற்குத் தீவினை என்று பெயர். தீவினையாகிய கேட்டினைப் புரிபவர் அரக்கராகத் தானே இருக்க முடியும். இரக்கமிலா ஈனர்கள் தாம் அரக்கர்கள் ஆகின்றனர். ஆகவே, நல்ல உடல் என்பதில் தான் நல்ல அருள் பிறக்கிறது. நல்ல உடல் என்பது கொல்லாமை தான் என்று ஒர் இலக்கணமே வகுத்துக் காட்டுகிறார் வள்ளுவர். இந்த நான்காவது பாடலில், கொன்று, ஊனைத் தின்பவர் கொடுமையாளர். அவர் இராக்கதர் என்றே கடுமையாகச் சாடுகிறார். மூன்றாவது குறளில், ஊன் உண்டால் உடல் சோரும். மதி மாறும். மந்தமாகும். துன்பமே சொந்தமாகும் என்று சொன்னவர், ஊன் தின்பவருக்கு நல்ல உடம்பும் நல்ல கருணை மனமும் அமையாது என்று துல்லியமாகத் தெரிவித்து விளக்குகிறார். 255. உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு. பொருள் விளக்கம்: உண்ணாமை = ஊன் உண்ணா மெய்யானது செய்யாது - ஊனை உண்ணாது சீவிப்பதாம் உள்ளது உயிர்நிலை = அந்த உடம்பில் தான் ஆத்மா நிறைவாக இருக்கிறது ஊன் உண்ண = பிற உயிரின் உடல் தசைகளைத் தின்ன அண்ணாத்தல் = வாய் பிளந்து அலைகிறபோது, உண்பவருக்கு அளறு = நரக வாழ்க்கையையே அளிக்கும். சொல் விளக்கம்: உண்ணாமை = உண்ணாதமெய், உள்ளது - உள்பொருள், ஆன்மா உயிர்நிலை = உயிர் நிற்கும் உடல் அளறு = குழப்பம், நரகம், சேறு. முற்கால உரை: ஒரு சாருயிர் உடம்பின் கண்ணே நிற்றல், ஊனுண்ணாமை என்கிற அறத்தின் கண்ணது. ஆதலான், அந்நிலை குலைய ஒருவன் அதனை உண்ணுமாயின், அவனை விழுங்கிய நிாயம் பின் உமிழ்தற்கு அங்காவாது.