பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 395 புதிய உரை: ஒழுக்கம் நிறைந்த உயர்ந்தோர், (மக்கள்) ஊன் எமக்குப் பகை, என்று உறுதியாகக் கூறிவிட்ட பிறகு, தின்பதற்காக மட்டுமல்ல, விற்பதற்காகக் கூட ஊன் தருபவர் யாருமே இருக்க மாட்டார்கள். விளக்கம்: உயிர்க்கொலை புரிபவரும், ஊன் சுவைத்து உண்பாரும், சாதாரண மனிதரல்லர். சண்டாளர். கொடிய அரக்கர் என்று முன் குறளில் கூறிய வள்ளுவர், புலால் மறுத்தலை எப்படி வெற்றிகரமாகச் செயல் பட முடியும் என்னும் நுணுக்கத்தை இந்தக் குறளில் கூறுகின்றார். கொள்ளாது: மனது விரும்பவில்லை: ஊன் உண்பதை வெறுக்கிறேன், பகைக்கிறேன் என்று யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அதைத் தொடர்ந்து உறுதியாகப் பின்பற்ற (ԼՔւգաՈ3,1. - ஏதோ ஒரு வேகத்தில், இனம் புரியாத சூழ்நிலை காரணமாக ஊனை ஒதுக்குவதாகக் கூறலாம். ஆனால், வாய் வீரம் பேசும் மக்கள் மீண்டும் அந்த வழிச் சேற்றுக்குள் வழுக்கி வீழ்ந்து விடுவார்கள். வாழ்க்கையிலும் நிறைய படுவார்கள். கொள்ளாது என்று யாரால் உறுதியாகக் கூறமுடியும்? அந்த வினாவுக்கு விடைதான் உலகு உலகத்தார் என்று கூறாமல் உலகு என்றார். ஒழுக்கத்தில் உயர்ந்த மக்கள் தாம் உலகு என்று போற்றப்படுகின்றனர் அதனால் தான் உலகெனின் என்றார். உலகாக விளங்கும் உயர்ந்த பண்பாளர்கள், ஒழுக்க சீலர்கள், உறுதியாகக் கூறிவிட்டால், அவர்கள் அருகில் யார் செல்ல முடியும்? ஊனை உண்ணுங்கள் என்று யாரால் சொல்ல முடியும்? ஊன் விலைஞர்கள் கூட, அவர்களது உறுதியான உள்ளத்திற்குள் ஊடுருவி விட இயலாது. அதனால் தான் யாரும் இல் என்று வள்ளுவர் மிக உறுதியாக உரைக்கிறார். ஒழுக்கமில்லாத உடல் கூழைச் சேறு. அடக்கமில்லாத மனம் ஆலகால நஞ்சு. அதைக் குறிக்கத்தான் தினற்பொருட்டு ஆல், விலை பொருட்டு ஆல் என்று இரண்டு முறை குறிப்பிடுகின்றார்.