பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/397

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


396 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா வேறு உயிர்களது உடலைச் சுவைப் பார், விடத்தைச் சுவைப்பார் என்று, புலாலை மறுக்கும் சூட்சமத்தை இந்த 6 வது குறளில் புரிய வைத்திருக்கிறார். 257. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ண துணர்வார்ப் பெறின். பொருள் விளக்கம்: பிறிதொன்றன் = பிறிதோருடம்பின் புண் அது = தசையான அது புல் ஆல் = ஊன் எனும் புன்மையான நஞ்சு என்று உணர்வால்பெறின் உள்ள நெகிழ்வுடன் பகுத்தறிந்த பிறகு, உண்ணாமெய் வேண்டும் = ஊன் உண்ணாத உடலாகக் காத்திட வேண்டும். சொல் விளக்கம்: புலா = புலவு, ஆல் = நஞ்சு, புண் = தசை உணர்வு = பகுத்தறிதல்; பாவித்தறிதல், அனுபவித்தறிதல், உள்ளம் நெகிழ்தல் முற்கால உரை: புலாலாவது பிறிதோருடம்பின் புண். அது தூய்தன்மை அறிவாரைப் பெறின். அதனை உண்ணாது ஒழியல் வேண்டும். தற்கால உரை: புலால் என்பது பிறிதோர் உடலின் புண்ணே என்பதை ஒருவர் உணர்ந்தாரே யானால், அவர் அப் புலாலை உண்ணாதிருத்தலைக் காத்திட வேண்டும். புதிய உரை: பிறிதோருடம்பின் தசையான அந்தத் தசைகள், ஊன் எனும் நஞ்சு என்று உணர்ந்தறிந்த பிறகு, அதை உண்ணாமல் தம் உடலைக் காத்திட வேண்டும். விளக்கம்: மற்ற உயிரின் உடலில் உள்ள தசைகளை, விரும்புகிறவர்கள் ஊன், மாமிசம் என்று, பெரிதாகப் பேசி மகிழ்கின்றார்கள். மாமிச உணவை வெறுப்பவர்கள், மிக எளிதாக, அதிலும் இழிவாக, பிறிதொன்றின் புண் என்று கேவலமாக எசி மகிழ்கின்றார்கள்.