பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/398

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 397 புலால் என்னும் சொல்லை நாம் பிரித்துப் பார்க்கிறோம். புல்+ஆல் என்று பிரிகிறது. அது புன்மையான நஞ்சு என்று பிரிகிறது. வேறொரு உடலின் தசைகளை விரும்பி உண்பார் ஒருபுறம். விலை பேசி விற்று வாழ்வார் மறுபுறம். இவர்களுக்கிடையில், இது பாவம் என்று விளக்கம் கூறி, பக்குவப்படுத்த முனைவோர் நடுப்புறம். s யாராக இருந்தாலும், பிறர் கூறும் அறிவுரைகளைக் கேட்டுத் தெரிந்து கொள்வதில்லை. திருந்தி விடுவதும் இல்லை. தானே திருந்தினால் தான் உண்டு என்கிற தத்துவ அனுபவ ஞானத்தை, இந்தக் குறள் மூலமாக, வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது என்பார்களே, அந்த முறையில் அறிவுறுத்தி இருக்கிறார். ஒருவன் ஒன்றினை உணரவேண்டும். உணர்ந்தால்தான் அவன் உள்ளம் தோயும். நல்லதை அல்லதை ஆராயும். பிறகு ஒர் ஆழ்ந்த முடிவுக்கு வரும். வள்ளுவர் வார்த்தைச் சித்தர் அல்லவா! அதனால் தான் உணர்வார் என்று ஒரு வார்த்தையை இங்கு வைத்திருக்கிறார். உணர்தல் என்பது ஐம் புலன்களால் உலகை உணர்ந்து கொள்வது. சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் மூலமாக, இந்த உலகின் இயல்புகளை உணர்வது. உணர்வுகள் தொடர்ந்து மனத்தில் பதிந்து, அறிந்து கொள்வதன் மூலம் அறிவது. அறிந்தவற்றில் தெளிவது. தெளிந்தவற்றில் தேர்ச்சி பெறுகிறபோது தான் ஞானம் உண்டாகிறது. இப்படி உணர்கிற ஆற்றல் உள்ளவர், பிறிதோருடம் பின் புண்தான். அந்தத் தசைகள் என்று அறியும் போதுதான், அவரது விருப்பு வெறுப்பாக மாறுகிறது. அந்த வெறுப்புதான் சிறப்பான ஒரு முடிவுக்குக் கொண்டு வருகிறது. அதைத்தான் வள்ளுவர் உணர்வார்ப் பெறின் என்றார். அந்த உயர்ந்த நிலைக்கு மக்கள் எல்லாம் உயர்ந்து, உயர்ந்தோராக வேண்டும் என்னும் விருப்பத்தில்தான், மனத்திண்மையை உருவாக்கும் உணர்வைப் பற்றி, ஏழாம் குறளில் எடுத்தியம்பி இருக்கிறார்.