பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/399

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


398 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 258. செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார் உயிரின் தலைப்பிரிந்த ஊன். பொருள் விளக்கம்: செயிரின் = உடல் நோய் மற்றும் மன நோயினின்றும் தலைப்பிரிந்த = விட்டு நீங்கிய தெளிந்த அறிவுடைய காட்சியார் = அறிஞர் பெருமக்கள் உயிரின் தலை = பெருமை மிகுந்த உயிரினை பிரிந்த ஊன் = விட்டுப் பிரிந்த உடல் தசைகளை உண்ணார் = உண்ணவே மாட்டார்கள். சொல் விளக்கம்: செயிர் = துன்பம், நோய், குற்றம், கோபம் தலைப்பிரிந்த = விட்டு நீங்கிய காட்சியார் = அறிவுடையார் முற்கால உரை: மயக்கமாகிய குற்றத்தின் நீங்கிய அறிவினை உடையார், ஒருயிரின் நீங்கி வந்த ஊனை உண்ணார். தற்கால உரை: உயிரில் இருந்து நீங்கிவிட்ட உடலாகிய புலாலை, குற்றத்தில் இருந்து நீங்கிய அறிவினையுடையார் உண்ணமாட்டார். புதிய உரை: உயிா நீங்கிய சிறந்த உடலின் ஊனை, அறிவுத் தெளிவும், உடல் நலம் காக்கும் உயர்ந்தோரான அறிஞர்கள், உண்ணமாட்டார்கள். விளக்கம்: செயிர் என்னும் பொருட் செறிவுள்ள சொல்லை வள்ளுவர் இங்கே வைத்துள்ளார். மனித உடல் என்றால் நோய்கள் இருக்கும். அதன் காரணமாக துன்பம் துணை சூழ நிறைந்திருக்கும். பேறு, இழவு, நரை, திரை, மூப்பு, பிணி என்னும் வாதனைகள் மிகுந்த வேதனைகள். மனித மனம் என்றால் ஆசுகளும் மாசுகளும் அதிகமாக இருக்கும். காமம், குரோதம், மோகம், லோபம், மதம், மாச்சரியம் என்னும் ஆறுவகை ஆசுகள் மனத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும்.