பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 399 இப்படிப்பட்ட உடல் மன உபாதைகளிலிருந்து, விடுபட்டு வந்த அறிஞர்கள் என்று வள்ளுவர் சொல்லுகிறார். உடல் நோய்க்குப் புலால் உணவு ஊறு விளைவிக்கும். இந்த உண்மையான காரணத்தை ஏற்க மறுப்பவர்கள், ஏராளமானவர்கள் இருந்தாலும் உண்மை உண்மைதானே. மரக்கறி உண்பாரைச் சாது என்று அழைப்பதும், மாமிசக் கறி உண்பாரை யாது (அரக்கர்) என்று அழைப்பதும் உலகில் நடை முறையில் உள்ள வழக்குதானே? இறந்து போன உடல் என்றால், கேட்பவர்கள் கோபப்படுவார்கள் என்று நினைத்த வள்ளுவர், மிகவும் இலக்கிய நயத்துடன் உயிர் நீங்கிய உடல் என்கிறார். இப்பொழுதெல்லாம் கண் இழந்தவர்களைக் குருடர் என்று அழைத்தால் மனம் வேதனைப்படுகின்றார்கள் என்பதால், விழி இழந்தோர் என்று அழகாக அழைக்கின்றார்கள். இந்தப் பண்பாட்டுப் பாரம்பரியத்தை, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னேயே, ஆரம்பித்து வைத்திருக்கிறார் பாருங்கள். உயிரிழந்த உடல் என்கிறார். அதையும் மிக அழகாக, உயிரின் தலை பிரிந்த என்னும் சொற்றொடரால் சுட்டுகிறார். உயிர் எனும் பெருமைதனை இழந்த உடல். இப்பொழுதும் கூட, அடுப்பில் மாமிசம் வேகிறது என்பதற்குப் பதிலாகப், பிணம் வேகிறது என்று குத்திக்காட்டு வோர் நிறைய பேர்கள் உண்டு. . பிணம் என்று சொல்லாமல், உயிரைப் பிரிந்த நிணம் என்று சொல்லி, ஊன் தின்பவர்கள் மனம் நோகாமல், உண்மையைக் காட்டுகிறார். தெளிந்த அறிவுள்ளவர்கள், உயிர் பிரிந்த ஊனை உண்ணக் கூடாது. உண்டால், அவர்கள் பல நோய்களுக்கு ஆளாவர். அப்படிப்பட்ட குற்றமும், நோய்களும் வரக்கூடாது என்னும் உண்மை உணர்ந்த சாட்சியார்கள், மாட்சிமையோடு புலாலை மறுத்திட வேண்டும் என்று எட்டாம் குறளில் பட்டவர்த்தன மாகவும், அதே சமயத்தில் பதமாகவும் பேசுகிறார்.