பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/407

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


406 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா - - m - - o * - - - - 261. உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு. பொருள் விளக்கம்: உற்றநோய் = பிறர் தமக்கிழைத்த கேடுகளின் துன்பத்தை நோன்றல் = பொறுத்துக் கொள்ளுதலும் உறுகண் = பிறர் கேட்டிற்குப் பதிலாக துன்பங்களை செய்யாமை = செய்யாமல் இருப்பதும் தவத்திற்கு = மன ஒருமை உடைமைக்கு உயிர் உரு உடலும் ஆன்மாவும் போன்ற அற்றே = தன்மையுடையதாகும். சொல் விளக்கம்: உற்ற = நேர்ந்த, நிகழ்ந்த, நோன்றல் = பொறுத்தல், சகித்தல் உறுகண் = துன்பம், நோய் ; உயிர் = ஆன்மா உரு = உடல் உருவம்; அற்றே = அத்தன்மைத்தே முற்கால உரை: உண்டி சுருக்கம் முதலியவற்றால் தம்முயிர்க்கு வரும் துன்பங்களைப் பொறுத்தலும், தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும் தவத்தின் வடிவாகும். தற்கால உரை: தனக்கு வரும் துன்பங்களைப் பொறுத்தல், பிற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தல் ஆகியவையே தவத்திற்கு அழகாகும். புதிய உரை: பிறர் இழைக்கிற துன்பக் கேடுகளைப் பொறுத்துக் கொள்வதும், செய்ததற்குப் பதிலாக அவருக்கு துன்பம் செய்யாமல் இருப்பதும் மன ஒருமை உடைய தவத்திற்கு, உயிரும் உடலும் போன்ற தன்மையதாக அமைந்து விடுகிறது. விளக்கம்: உண்டி சுருங்குதல், வெயிலில் காய்தல், நீரில் பனியில் நனைதல் போன்றவற்றால உடலை வருத்திப் பெறும் துன்பம் என்று பரிமேலழகர் அக்கால வாழ்க்கை முறையை ஒட்டி எழுதிய உரையில் கூறுகிறார். தற்கால உரையாசிரியர்கள், தனக்கு வரும் துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளுதல் என்று தான் எழுதியிருக்கின்றனர்.