பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/409

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


408 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அஃதிலார் = மன ஒருமைப்பாட்டு இல்லாதவர் அதனை மேற்காள்வது - தவத்தைத் தொடர (நினைத்தல்) முயற்சித்தல் அவம் = உடலுக்குத் தீமையும் உயிருக்குக் கேடும் பயக்கும். சொல் விளக்கம்: தவம் = இயமம் நியமம் உள்ள விரதம்; தவமுடையார், மன ஒருமை உடையார்; அவம் = தீமை, கேடு, வீண். முற்கால உரை: பயனேயன்றி தவந்தானும் உண்டாவது முற்றவ முடையார்க்கே, ஆதலான், அத்தவத்தை அம் முற்றவமில்லாதார் முயல்வது பயனில்லாத முயற்சியாம். தற்கால உரை: தவச்செயல்களை மேற்கொள்ளுதல், தவத்தன்மை உடையவர்க்கே தகும். அத்தன்மைகள் இல்லாதார் அச்செயல் களைக் கொள்ளுதல் அத்தவத்திற்கும் அச்செயல்களுக்கும் இழிவாகும். புதிய உரை: தவம் செய்வதானது, மன ஒருமையும் உறுதியும் உடையவர்க்கே முடியும். மன ஒருமையும் மன உறுதியும் அற்றவர்கள், தவம் செய்யமுயல்வது, அவரது உடலுக்குத் தீமையையும் உயிருக்குக் கேடுகளையும் உண்டாக்கும். விளக்கம்: தவம் என்பது இயமம் நியமத்துடன், கடுமையான விரதங்களைக் கடைப்பிடித்து, தவறாது ஒழுகுவது. அவற்றைத் தினம் தொடர்வதற்கு மன ஒருமை, மன உறுதி, மன வலிமை வேண்டும். இயமம் என்பது 5 ஒழுக்கநெறிகள் உடையது 1. பிறருக்குத் தீங்கு செய்யாமை. (அகிம்சை); 2. உண்மையே பேசுதல் (சத்தியம்); 3 களவாடாமை; (அஸ்தேயம்); 4. புலன்களைக் கட்டியாளுதல் (பிரம்மச்சாரியம்); 5. பிறர் பொருள்மீது பேராசை கொள்ளாமை. (அபரிக்ரகம்). அதேபோல நியமம் எனும் 5 ஒழுக்க நெறிகள். 1. உடல் மனம் தூய நிலை (லெளசம்); 2. மகிழ்ச்சி நிலை (சந்தோஷம்) 3.தவத்திற்குரிய ஒழுங்கு நிலை (தபசு); 4. சுய ஞானத்தை