பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


38 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா -** முற்கால உரை: மேகத்தின் துளிiழில் காண்பதல்லது, அப்பொழுதே பசும்புல்லின் தலையையும் கண்டல் அரிது. தற்கால உரை: வானிலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், அத்துளிiழாத இடத்தில் பசும் புல் முளைத் தலையும் பார்க்க (ԼՔւգ եւյՈՅ:/. புதிய உரை: மழைத்துளி வீழாமல் போனால், மண்ணுலக மக்கள் மருவுகிற புணர்ச்சியும், உருவாக்குகிற செயல்களும் செழிப்பில்லாமல் அரிதாகிப்போய்விடும். விளக்கம்: மழையில்லாமல் மண்ணுலக மக்களும் வறுமையில் வதிவார்கள், அழிவார்கள் என்று முதல் ஐந்து குறள்களிலும் விளக்கி வந்த வள்ளுவர் இந்த ஆறாவது குறளில் முத்தாய்ப்பாக ஒரு கருத்தை முன் வைக்கிறார். # வயிற்றின் வறுமை வாழ்வின் கொடுமையாகும். அதனால் மன எழுச்சியிலும் வெறுமை ஏற்படுத்தி விடுகிறது. அதனால் உடலின் உயிர்ப் புணர்ச்சிகூடத் தலைகாட்டாமல் போகிறது. பசும்புல் தலைகாண்பரிது என்பதில்தான் இங்கே பொருள் மாறுகிறது. பசும்புல் முளைக்காது என்பது இயற்கைவிதி. ஆனால், வள்ளுவரோ மிகக் கூர்மையான கருத்துள்ள பசு புல் என்னும் இரண்டு சொற்களையும் இணைத்து ஒரு புதிய புரட்சியை உண்டு பண்ணி இருக்கிறார். உலகுக்குப் பெருமை உயிர்கள். மக்கள் பெருக்கத்திற்கு வழிகாட்டுவது உடல் வளமும் கூட்டமும். அந்த இன்றியமையாச் செயல்கூட அற்றுப்போகும் என்னும் வாழ்க்கை இரகசியத்தை மிக எளிதாக வள்ளுவர் விளக்கி இருக்கிறார். 17. நெடுங்கடலும் தன்னிமை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின் பொருள் விளக்கம்: நெடுங்கடலும் = கரையற்ற கடலும் தன்னிர்மை = தனக்குப் பெருமைமிகு உறுதிப்படுகிற செயல்களைச் செய்யாமல் -