பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/410

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 409 உருவாக்குதல் (ஸ்வாத்தியாயம்); 5. மனக் கட்டளைக்குப் பணிதல் (பிரணிதாளம்). இத்தகைய ஒழுக்க நெறிகளைக் கற்று, ஒரு சிறிதும் தவறாது தொடர்ந்து நடந்து கொள்ளும் பண்பு. அவற்றையே நினைத்துக் கொண்டிருக்கும் மன ஒருமை; அவற்றிலிருந்து விடுபடாத மன உறுதி. அவற்றைத் தொடர்ந்து செயல்படுத்தும் மனவலிமை. இவைதான் தவம் என்று அழைக்கப்படுகிறது. மேற்கூறிய நல் வினைகளைச் செய்தால் தவம். இல்லையேல் அவம். உள்ளொன்று நினைத்துச் செயலொன்று செய்தால், வேதனை உடலுக்கு. சோதனை உயிருக்கு வாதனை பிறருக்கு. தவம் - தவமுடையார் - அவம். அவம் அடைவார் என்று பிரித்துக் காட்டுகிற வள்ளுவர், துறவறத்தாருக்கு அருளுடைமை, புலால் உண்ணாமை என்பதைவிட, மன ஒருமை உடைமையே முதலில் வேண்டற்பாலது என்று, இரண்டாவது குறளில் இனிதாக எடுத்துரைக்கிறார். 263. துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல் மற்றை அவர்கள் தவம். பொருள் விளக்கம்: துப்புரவு வேண்டி - ஐம்புலன் நுகர்ச்சியை விரும்பி மறந்தார் = தம் துறவு நிலையை மறந்தவரான துறந்தார்க்கு = துறந்தவர்களுக்கு மற்றை அவர்கள் = அறிவாளர்களான அவர்களுக்கு அடுத்து கொல் = தடுத்து தாழ்ப்பாளிடுவதுதான் தவம் = மன ஒருமை உடைமையின் உறுதியாகும் சொல் விளக்கம்: துப்புரவு - ஐம்புலன் நுகர்ச்சி, முறைமை, அனுபவம் வேண்டி = விரும்பி, இரத்தல். கொல் = குறுக்குத் தாழ்ப்பாள் பூட்டு மற்றை அடுத்துத் தொடர்வது; தவ அறிவு. முற்கால உரை: இல்லறத்தையே பற்றி நிற் பார், துறந்தார்க்கு உண்டியும் மருந்தும், உறையுளும் உதவலை விரும்பி, தாம் தவம் செய்தலை மறந்தார் போலும்.