பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/412

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை | | | வள்ளுவர் அவர்கள் என்றும், கொல் என்றும் இரண்டு மனியான சொற்களைத் தந்திருக்கிறார். அவ என்றால் அறிவு. அவர்கள் என்றால் அறிவுள்ளவர்கள். கொல் என்றால் குறுக்குத் தாழ்ப்பாள், பூட்டு. துறந்தவர்கள் மன உறுதியில் தளர்ந்து விடுகிற சமயத்தில், அவர்களது அறிவுதான், குறுக்குத் தாழ்ப்பாளாக அமைந்து, தடுத்தாள்கிறது. அந்தப் பூட்டுதான் தவமெனும் மன ஒருமை. ஒருவரது LD QOT ஒருமைதான் தவற்றை விரட்டும்; வலிமையைத் திரட்டும். குறிக்கோளுக்கு இட்டுச் செல்லும். அதனால்தான், இந்த மூன்றாம் குறளில் (தவத்தின் இலக்கணம் கூறினார். தவத்தை எல்லோராலும் ஏற்க முடியாது என்றார்). தவத்தினின்றும். நழுவினாலும், அவரது அறிவு சிறைமீட்கும் கோலாகும். சிறப்பூட்டும் நூலாகும் என்று உறுதி உண்மையை எடுத்துரைக்கின்றார். 264. ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும் எண்ணின் தவத்தான் வரும். பொருள் விளக்கம்: ஒன்னார் = துறவற வாழ்வுக்குப் பொருந்தாதவர்கள் தெறலும் - அவர்கள் கெடுக்கும் முயற்சிகளை அழிக்கவும்: உவந்தாரை - துறவற நெறியில் விருப்பமான வரை ஆக்கலும் அவர்க்கு உதவி உயர்த்துதலும் எண்ணின் - இலட்சிய நோக்கம் கொண்டிருக்கும் தவத்தான் வரும் - தவ வலிமையால் செய்திட முடியும். சொல்விளக்கம்: ஒன்னார் = பொருந்தாதவர்; பகைவர் தெறல் - கெடுத்தல், அழித்தல், கோபித்தல் உவத்தல் - மகிழ்தல், விரும்புதல்; ஆக்கல் = படைத்தல், உயர்த்தல்; எண்ணின் - நோக்கம் கொள்ளல் முற்கால உரை: தம் அறத்திற்குப் பகையாய் அழிவு செய்தாரைக் கெடுத்தலும், அதனை உவந்தாரை உயர்த்தலுமாகிய இவ் விரண்டையும் தவம் செய்வார் நினைப் பாராயின், தவவலியால் அவர்க்குளவாம்.