பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருக்குறள் புதிய உரை 413 எண்ணின் வரும் என்றார். தவமான மன ஒருமையால், செயல் ஒருமையால் நிகழும் என்று 4வது குறளில் தவத்தின் வலிமையை வியந்து பாடுகின்றார். 265. வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டு முயலப் படும். பொருள் விளக்கம்: வேண்டிய வேண்டி - தவம் செய்து தான் பெறவேண்டியதை எல்லாம்; ஈண்டு = விரைவாக ஆங்கு எய்தலால் - அப்பொழுதே பெற்று, பயன் அனுபவித்தலால், செய்தவம் = ஒருமனத்துடன் செயலற்று இருப்பதை (தவத்தை) முயலப்படும் = தொடர்ந்து செய்திட, நன்மைகள் மிகுதியாகவே கிடைக்கும். சொல் விளக்கம்: ஆங்கு - அப்பொழுதே ; எய்தலால் = பயன் அனுபவித்தலால், பொருந்துதல், பெற்றுக் கொள்ளுதல்; ஈண்டு - விரைந்து, நிறைவாக; முயலால் = தொடர்ந்தேற்றி, ஊக்கம், உற்சாகம் படும் = நன்மை, மிகுதி முற்கால உரை: முயன்றால், மறுமைக் கட்டாம் வேண்டிய பயன்கள், வேண்டியவாறே பெறலாம். ஆதலால், செய்யப்படுவதாய தவம் இம்மைக்கண் அறிவுடையோரான் முயலப்படும். தற்கால உரை: ஒருவர் செய்யும் தவத்தின் ஆற்றலால், அவர் விரும்புவன விரும்பியவாறே அடையப் பெறுதலால், அத்தவம் இங்கு முயன்று செய்யப்படுவதாகின்றது. புதிய உரை: ஒருங்கி நிலை பெற்ற உள்ளத்துடன் செய்கிற தவத்தால், பெறவேண்டிய எல்லா பயன்களும் அப்பொழுதே கிடைப்பதால் உடனே தவத்தை விரைந்து, தொடர்ந்து, உற்சாகத்துடன் செய்ய வேண்டும்