பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா விளக்கம்: வேண்டிய என்ற சொல்லானது ஒரு துறவிக்கு என்ன வேண்டும்? என்று வினாவாக எழுந்து, விடையாகத் தொடர்கிறது. உற்றதையெல்லாம் துறந்து, பற்றற்ற நிலைக்குள் வந்த துறவி, என்ன எதிர்பார்த்து, இந்தத் தவத்தை ஆற்றுகிறார். பள்ளத்தில் உள்ள நீரில் வாழ்கிற மீனினம், அந்தப்பழைய நிலை விட்டு வருகிற புதிய வெள்ளத்தைக் காண, அதில் வாழ ஆசைப்படுவது போல, துறவியானவர் என்ன புதிய பயனை எதிர்பார்க்கிறார். நல்ல துறவிகள் நடுங்குவதில்லை. நமனும் அங்கில்லை. இடும்பையும் இல்லை. இராப்பகல் இல்லை. அடைவதற்குரிய வழிப் பயன்களும் இல்லை' என்று திருமூலர் (1598) காட்டுகின்றவைதான், துறவி விரும்பி வேண்டி, துதித்துக் கேட்டுப் பெறுகின்ற நன்மைகளாகும். ஆதலால், செய்தவம் ஈண்டு என்கிறார் வள்ளுவர். ஈண்டு என்றால், விரைவாக, நிறைவாக, மிகுதியாக இம்மெய்க்குள்ளே இயற்றுங்கள். தவத்தை என்று சொல்கிறார். ஏன் விரைந்து செய்ய வேண்டும்? இந்தப் பிறவிக்குள்ளே, நாளை நடப்பதை நாமறியோம். இன்று என்பது தான் பொய்யான உலகில் மெய்யான நிலை. ஆகவே, விரைந்து செய்யுங்கள். படும் என்றால் நன்மை, மிகுதி என்று பல பொருட்கள் உண்டு. கிடைக்கின்ற நன்மைகளைப், பெறுவதற்காக முயல அதாவது தொடர்ந்தேற்றி செய்து பெறுக என்கிறார். புலன்கள் என்பவை இளங்கன்றுகள்போல எப்பொழுதும் துள்ளித் திரிந்து, கொட்டிலுக்குள் அடங்காமல், அலைந்து மலையும் கன்றுகளை, அடக்குபவன்தான் நல்ல மேய்ப்பன். அதுபோல, தவத்தின் பயனை நுகருமாறு செய்யவிடாமல், புலன்கள் நெஞ்சினை மடக்கும். அதனை அடக்கிக் கட்ட வல்லார்க்கே நெஞ்சத் திடம் உண்டாகும். ஆகவே, அந்த நெஞ்சத்தின் ஆற்றலை அதிகப்படுத்திக் கொள்ள விரைந்து, விடா முயற்சியுடன், நோற்றுத் தவம் செய்யவேண்டும். அப்படிச் செய்கிறபோது, பெறுகிற பயன்கள்