பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/416

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 415 (՞Ջ எல்லாம், துறவிக்கு வேண்டியனவாக, அவர் விரும்பியனவாகக் கிடைக்கும் என்ற உண்மை நிலையை, மேன்மை வழியை, வள்ளுவர் 5 ஆம் குறளில் தெளிவாகக் காட்டுகிறார். 266. தவம்செய்வார் தங்கருமம் செய்வார் மற்றல்லார் அவம்செய்வார் ஆசையுள் பட்டு. பொருள் விளக்கம்: தவம் செய்வார் = புலன் வழி போகாமல், உள்ளம் ஒடுங்கி, மன ஒருமையுடன் தவம் செய்கிறவர். தம் கருமம் = தமது ஆன்மாவின் ஒருமைக்கான காரியங்களையே செய்வார் = மிகுதியாகச் செய்வார் மற்றல்லார் = மற்றைய தீயோர்கள் ஆசையுள்பட்டு = புலனாசைகளுக்கு வேகப்பட்டு அவம் செய்வார் = iணான கேடுகளையே செய்வார்கள். சொல் விளக்கம்: தம் - ஆன்மாக்கள்; கருமம் = தொழில், கடமை, செய்கை அல்லார் = தீயோர்கள்; அவம் = iண், கேடு, தீவினை. முற்கால உரை: தம் கருமம் செய்வாராவார் துறந்த தவத்தைச் செய்வார். அவரையொழிந்த பொருளின்பங்களைச் செய்வார் அவற்றின்கண் ஆசையாகிய வலைஉட்பட்டுத் தமக்குக் கேடு செய்வார். தற்கால உரை: தவம் செய்பவர் என்று சொல்லப்படுபவர் தம் கடமையைச் செய்பவரே. அவரை அல்லாத மற்றவர், ஆசை எனும் பிடியுள் பட்டு, வீண் செயல் செய்பவரே. புதிய உரை: உள்ளம் ஒடுங்கி தவம் செய்பவர்கள், தங்கள் ஆன்மாக்கள் வலிமை பெற்றுய்யவே, கடமையாற்றுகின்றார்கள். தவவேடம் பூண்ட மற்ற தீயோர்கள், புலன் இன்பத்தில் சிக்கி, வீணான கேடுகளையே செய்து பட்டுப் போகின்றார்கள். விளக்கம்: தவம் செய்பவர்கள், தங்கள் ஆனந்தத்திற்காகவே அரிய கடமைகளை ஆற்றுகின்றார்கள். ஆன் நந்தம். என்பதே ஆனந்தம். அதாவது ஆன்மாவின் இன்பப் பெருக்கமே ஆனந்தம்.