பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/418

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை i 417

  • =

துன்பம் - மெய்வருத்தம், மனவருத்தம் போன்ற பவர்க்கு = கொடுமைமிக்க இடையூறுகளில் தடச்சுட நோற்கில் = பட்டு பட்டு சகித்து கொள்கிறபோது ஒளிவிடும் - கடவுள் தன்மை உண்டாகி விடுகிறது சொல் விளக்கம்: சுடர் = பிரகாசித்தல்; ஒளி = ஞானம், புகழ், கடவுள் தன்மை துன்பம் = மெய் வருத்தம், மனவருத்தம் நோற்க - சகித்துக்கொள்ள பவர் = நெருக்கம், இடையூறு, கொடுமை, ஒடுக்கம் முற்கால உரை: தீயின் கணோடும் பொன்னுக்கு அது சுடச்சுட, தன்னோடு கலந்த குற்ற நீங்கி, ஒளி மிகுமாறு போல தவம் செய்ய வல்லாருக்கு அதனான் வருந்துன்பம் வருத்த வருத்தத் தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானமிகும். தற்கால உரை: துன்பம் ஒரு பொழுதுக்கு ஒரு பொழுது வருத்தவும், அதனைப் பொறுத்துக் கொள்ளும் துறவினர்க்குச் சுடச்சுட ஒளியுண்டாகும் பொன்போல் ஒளி உண்டாகும். புதிய உரை: தீயில் சுடப்படுகிறபோது பிரகாசிக்கிற தங்கம் போல துன்பக் கொடுமைகளைத் தவத்தின் காரணமாகச் சகித்துக் கொள்கிறபோது, ஞானம் மிகுதியால் கடவுள் தன்மை உண்டாகிவிடுகிறது. விளக்கம்: தவத்தின்போது அதிக இடையூறுகள், இடர்ப்பாடுகள் நேரிடும். இயற்கையின் மூலமாக, மிருகங்கள், பூச்சிகள் வாயிலாக, மனிதர்கள் வழியாக, தன் புலனடக்கமின்மை காரணமாக வருகின்ற துன்பங்கள். துன்பங்களைச் சந்தித்து, அவற்றிலிருந்து விடுபடுவதைச் சிந்தித்து, அவற்றின் மூலமாகச் சாதகமான உண்மைகளையும் நன்மைகளையும் வந்தித்து, வைராக்கிய மனத்துடன் தொடர்கிற போதுதான், தவம் முழுமை பெறுகிறது. துன்பம் எனும் போது, வியாதி மூலமாக மெய் வகுத்தம்: விருப்புகளால் மனவருத்தம் என்று நெருக்குகிறபோது. அவை