பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/419

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


4.18 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தீயாய் சுடுகின்றன. அதில் அமிழ்ந்து, வெற்றிகரமாக வெளியே வருவதற்குத்தான் பொன்னை இங்கே உவமையாகக் காட்டுகிறார். தீயில் படப்பட, தீயும் சுடச் சுட, பொன்னும் ஒளி பெறுகிறது. மக்களுக்குப் பயன்படும் வண்ணம் அணியாகிறது. பொன் என்றாலும் உடல் என்று ஓர் அர்த்தம் உண்டு. உடலும் துன்பத் தீயில் உருகும் போது, பலவித சோதனைகளையும் வேதனைகளையும் ஏற்று, சாதனையாக மாற்றிக் கொண்டு வெளிவருகிறது. நோற் கிற் என்றால் சகித்துக் கொள்ளுதல், பொறுத்துக் கொள்ளுதல் என்று பொருள். துன்பம் கண்டு புலம்பக் கூடாது. துவளக்கூடாது. இலட்சியத்தை மறந்து விடக்கூடாது. நம்பிக்கையை கைவிடக்கூடாது. காயப்பட்ட திண்மையான மனம், சாதாரண மனிதனுக்கே தேவையென்றால், துறவிகளுக்கு எவ்வளவு வேண்டும்? துறந்த துறவியர்களுக்குத், துன்பமானது சிறந்த பாடமாக மாறுவதால்தான், ஞானம் மிகுதியாகிறது. எல்லாரையும் மதிக்கும் அன்பு, எல்லாருக்கும் உதவுகிற பண்பு. எல்லாரையும் காக்கின்ற கனிவு. இவற்றால், அவரது ஆத்ம சக்தியானது கடவுள் தன்மையை அடைந்து விடுகிறது. அதுதான் துன்பத்தின் ஆற்றல். பொன்னுக்கு உடலை உவமை காட்டிப் பெருமை சேர்ந்திருக்கிற வள்ளுவர். இந்த 7ஆம் குறளில், ஞானத்திற்கு அனுபவங்கள் அவசியம் என்பதை வலியுறுத்தியிருக்கின்றார். 268. தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய மன்னுயிர் எல்லாம் தொழும். பொருள் விளக்கம்: தன் உயிர் = தனது ஆன்மாவில் (உள்ள) தான் = தான் எனும் பற்றினை அறப் பெற்றானை முழுதுமாக நீங்கப் பெற்றவனை ஏனைய எல்லாம் - (மற்ற) உலகத்திலுள்ள மன்னுயிர் கொழும் சீவன்கள் எல்லாம் தொழுது வணங்கும்