பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 39 குன்றும் குறைந்து போகும். தடிந்தெழிலி : மின்னலுடன் பொழிகிற மேகம் தான் நல்காது தான்பொழியாது ஆகிவிடின் = நிலை அடைகிறபோது. சொல் விளக்கம்: நீர்மை = ஒப்புரவு, குணம், உறுதி; தடிந்து = மின்னி நெடுங்கடல் = கரையற்ற கடல் முற்கால பொருள்: அளவில்லாத கடலும் தன்னியல்பு குறையும், மேகந்தான் அதனைக் குறைத்து அதன்கண் பெய்யாது வருமாயின். தற்கால உரை: கடலில் முகந்த நீரை முகில் மழையாக மீண்டு வழங்காது என்றால், பெரிய கடலில் கிடைக்கும் வளங்கள் எல்லாம் குறைந்து போகும். புதிய உரை: மின்னலுடன் பொழிகிற மேகம் தான் பொழியாத போது, கரையற்ற கடலும் தனக்குரிய பெருமைமிகு செயல்களை எல்லாம் உறுதிப்படச் செய்யாமல் குறைந்து போகும். விளக்கம்: கரையற்ற கடலுக்குரிய பெருமை அதிலுள்ள முத்து, பவளம், உப்பு, சங்கு போன்ற செல்வங்களே. மேலும் அதிலுள்ள எண்ணற்ற உயிரினங்களும் ஆகும். கடல்நீர் உயிர்வாழ உதவும். ஆனால், பிறப்புக்கு உதவாது. உயிரினங்கள் உற்பத்தியாக, முத்து, பவளம் உண்டாக மழைத்துளிதான் மூல காரணம். மின்னி மேகம் மழை பொழியாத போது கடலின் இயல்பான பெருமை குறைந்து போகிறது என்பதைக் குறிக்கிற வள்ளுவரின் குறிப்பு சிறப்பானது, 6 வது பாடலில் மண்ணுலக மக்கள் பிறப்புக்கு மழை உதவுவதைப் பசும்புல் என்று குறித்துக் காட்டினார். இந்த 7 வது பாடலில் நீர்வாழ் உயிரினங்கள் பிறப்புக்கும் கடல் படு திரவியங்களின் உற்பத்திக்கும் மழையே காரணம் என்று குறித்துக் காட்டுகிறார்.