பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/421

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


420 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தான் அற என்னும் சொற்களில், துறவறத்தின் முழுக் கோட்பாடும் காட்டப்பட்டு விட்டது. இதுவே மனித மாண்பின் மகத்துவத்திற்கு மணிக் கொடியாகவும் இருக்கிறது. தான் என்பது முழுவதும் நீங்குவதற்கு, தன்னைப் பற்றிய அறிவும் தேவைப்படுகிறது. அந்த அறிவைத் தேடித்தான் துறவறம் பூண்டு, துடிப்புடன் முயற்சிக்கின்றார். ஐந்தாம் குறளில் முயல படும் என்றார். ஆறாம் குறளில் தம் கருமம் செய்வார் என்றார். ஏழாம் குறளில் - துன்பத்திற்குத் தயாராகு. அதுதான் ஆனந்தத்தின் ஆணிவேர் என்றார். எட்டாம் குறளில், தன்னை - அறுத்து விலக்கு என்கிறார். ஆத்துமம் தழைக்கவும் செழிக்கவும், அறுமின் என்கிறார். ஆசை அறுமின் ஆசை அறுமின் ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின் என்றார் திருமூலர். தான் எனும் கர்வத்தின் வெளிப்பாடே எதிலும் ஆசை வைப்பது. அதுவும் அளவுக்கு மீறி ஆசைவைப்பது. பொறியும் உடலும் ஒத்து, செத்துத் திரிபவரே துறவி. அதுவே ஆன்ம அடக்கமும் ஒடுக்கமும் ஆகும். என்பதை இந்த எட்டாம் குறளில் திட்ட வட்டமாகத் தெளிவு படுத்துகிறார். 269. கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றல் தலைப்பட்ட வர்க்கு. பொருள் விளக்கம்: நோற்றலின் ஆற்றல் = தவத்தால் பெறுகிற ஞானமும் வலிமையும் தலைப்பட்டவர்க்கு = மிகுதியாக வளர்த்துக் கொண்டவருக்கு கூற்றம் = கொடிய பகைவரையும் குதித்தலும் = வெற்றி கொள்ளுதலும் கை கூடும் = நடந்தேறும், நிச்சயமாக நிகழ்ந்துவிடும் சொல் விளக்கம்: கூற்றம் கொடிய சத்துரு, எமன், வார்த்தை குதித்தல் = வெல்லுதல், துள்ளல்; கைகூடல் சம்பவிக்கும் தலைப்படுதல் வளரச் செய்தல்; ஆற்றல் = ஞானம், வலிமை