பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 421 முற்கால உரை: தவத்தான் வரும் ஆற்றல் தலைப்பட்டார்க்கு கூற்றத்தைக் கடத்தலும் உண்டாவதாம். தற்கால உரை: உள்ளத்தின் உறுதியால் பேராற்றலில் ஓங்கி நிற்பவர்க்கு, அவரை வருத்தவரும் இறப்பும் எதிர் நிற்க மாட்டாமல், ஒடக் காண்பதுவும் கை கூடுவதாகும். புதிய உரை: தவத்தால் பெறுகிற ஞானத்தையும் வலிமையையும் மிகுதியாக வளர்த்துக் கொண்டவருக்கு, அவரை எதிர்க்கும் கொடிய பகைவரையும் வெற்றி கொள்ளுதல், உறுதியாக நடந்தேறும் (வெல்லும்). விளக்கம்: கூற்றம் என்றவுடன் எமன், நமன், இறப்பு என்று தான் பலர் பொருள் கண்டிருக்கின்றனர். எமன் கண்ணுக்குத் தெரியாதவன். இறப்பு வரும் திசையைக் கூட அறிய முடியாது. ஆக, தெரியாததையும் யூகிக்க முடியாததையும் எதிர்த்து வெல்லுதல் என்பது கற்பனைக்கும் எட்டாததே! ஆகவே, வள்ளுவர், வாழ்க்கையில் நிகழ்கின்ற சாத்தியமான கருத்துக்களையே எடுத்துக் காட்டுகிறார். (எமனைப் போல) கடுமையான எதிரி, கொடுமையான பகை, அந்தப் பகையை வென்றிட முடியும். எப்படி? செய்த தவத்தால் பெற்ற வலிமையால். வல்லமையின் பெருமையை விளக்கும் முகமாக, நோற்றலின் ஆற்றல் என்கிறார். மனப்பாகன் கைகூட்ட மாயத்தேரேறி வருகிற மக்கள், போகும் திசை புரியாது, வாழும் வகை அறியாது, மடிந்து போகின்றவர்கள். ஆனால், துறவறம் பூண்டவர்களோ, இயமம் நியமம் எனும் தேரேறி, சமாதி நிலை என்னும் ஆயத்தேரேறி வலம் வருகிற வல்லமையாளர்கள். அவர்கள் முன்னே எந்தப் பகை எழும் எந்தப் பகை வெல்லும்? கூற்றம் குதித்தல் என்றார், எமன் குதிக்கிறான் என்று தான் முதலில் எண்ணத் தோன்றுகிறது. ஆனால், சொல்லுக்குள் சொல்லை வைத்துச் சூட்சமத்தை அடைத்து வைக்கும் சித்தரான