பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/424

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருக்குறள் புதிய உரை 423 புதிய உரை: வலிமை மிக்க ஆன்மாவுடன் அரிய தவம் மேற்கொண்டு ஒழுகுபவர் சிலர் தான். ஏனென்றால், பொறாமை குணத்தால் தவறு செய்பவரும், உடல் மன வலிமையற்றவர்கள் பலராக இருப்பதால் தான் தவம் செய்பவர் சிலராக இருக்கின்றார்கள். விளக்கம்: நோற் பாருக்கு உடல் வலிமை வேண்டும். மனவலிமை வேண்டும், ஆன்ம பலம் வேண்டும் என்னும் சீரிய உண்மையை, மிக அழகாக இந்தக் குறளில் காட்டியிருக்கிறார் வள்ளுவர். தவம் என்றாலே மன ஒருமை. ஒடுங்கி நிலைபெறும் உள்ளம். உள்ளம் பிரியாத ஒர்நிலை; இமைத்தும் அழியாதிருக்கும் தவ உணர்வு. புலன் வழி போகாத பேராண்மை, செயலற்று இருக்கும் சிந்தை. இழுக்காத நெஞ்சத்தின் திடம். இவ்வளவு குணங்களும் கொண்டவர்களாக, இந்த உலகில் சிலர்தான் வலம் வருகின்றனர். பொறாமை கொண்ட புன்மனத்தினர். மற்றவர்களைச் சினக்கிற மாய்மால குணத்தினர்; எதற்காகவும் தம்மை விற்றுக் கொள்கிற ஈனமனத்தினர்; வறுமை என்றால் பொருளில் மட்டுமல்ல; பொருளாகிய பொன்போன்ற உடலிலும்தான். அவர்கள் வறுமைப்பட்டு, வெறுமையுற்று, திறமையற்று, தேக நலம் விட்டு, நடைப் பிணமாய்த் திரிகின்றபோது, மனத்தில் சீலம் எப்படி வரும்? அலங்கோலம் அவாவிக் கொண்டு, அவர் வாழ்க்கையை ஆட்சி செய்கிறபோது, அமைதியான மனம் எப்படி வரும்? அதனால்தான் இலர் பலர் என்றார். இல்லாமையில் கொடிய பிடியில் இருப்பவர் பலர். பலர் நோலாதவர் என்றார், பொறாமை என்னும் தவற்றைப் புரிகின்றவர்; தவறுக்குள்ளே புரள்கின்றவர்; தவறுகளாலே புதையுண்டு போகிறவர்தாம் அநேகர் என்று நோலாதவர் என்றார். தீயவர்கள் என்றால் கூட்டம். தூயவர்கள் என்றால் அவை. இப்படி இருக்கின்ற மக்களின் இயல்பை, மிக துண்மையாக கோடிட்டுக் காட்டியிருக்கிறார். மேன்மக்கள் குறைவு. கீழ் மக்கள் அதிகம். கீழ் மக்கள் மேன் மக்களாக வா, தனக்குள்ளே உள்ள ஆன்மாவை, தன் வயப்படுத்த வேண்டும்; தன்னெறிப்படுத்த வேண்டும், தானே தனக்காக தலைப்பட வேண்டும் என்று தவத்தின் சுகத்தையும், அவத்தின் அகத்தையும் அருமையாகக் கூறி முடித்துள்ளார்.