பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/427

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


426 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 271. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும். பொருள் விளக்கம்: வஞ்சமனத்தான் = கபடமும் சிறுமையும் நிறைந்த மனமுடைய தவசியின் படிற்றோழுக்கம் பொய் க்ளவும், அடங்காத்தனமும் உள்ள செயல்கள் கண்டு பூதங்கள் = உயிரானது, அந்த மோசம் அறிந்து ஐந்தும - அஞ்சுவதுடன, அகத்தே நகும் உள்ளுக்குள்ளே இகழ்ந்து தாழ்ந்து போகும். சொல் விளக்கம்: வஞ்சம் = கபடம், சிறுமை; படிற்று = பொய், களவு, அடங்காத்தனம்; பூதம் = உயிர், பஞ்சபூதங்கள்; கள் = களவு, மோசம்: ஐந்து = அஞ்சு, பயப்படு நகும் இகழும், தாழ்த்தும், அவமதிக்கும் முற்கால உரை: வஞ்சம் பொருந்திய மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை, உடம்பாய் அவனோடு கலந்து நிற்கிற பூதங்கள் ஐந்தும் தம்முள்ளே நகும். தற்கால உரை: உள்ளொன்றும் வெளியோன்றுமாம் மனத்தவன், தன் தீய பழக்கத்தைப் பிறர்க்கு மறைப்பினும், அவன் உடலின் கண்ணே உள்ள ஐம்பூதங்களும் உள்ளுக்குள் சிரிக்கும். புதிய உரை: கபடமும் சிறுமையும் நிறைந்த மனத்தினனாகிய துறவியின் பொய் களவைக் கண்டு, அவன் உள்ளே வாழும் உயிரானது அஞ்சி, உள்ளுக்குள்ளே அவமானமடைந்து தாழ்ந்து போகும். விளக்கம்: வஞ்ச மனத்தான் படிற்றெ ாழுக்கம் என்பது வரை யிலும், உரைகளில் எதுவும் மாற்றமில்லை. பொய் மனத்தான். அவனது களவும் கபடமும், அடங்காத்தனமும் ஆகியனவற்றை. பூதங்கள் ஐந்து என்னும் இடத்தில் கான் பொருள் மாற்றம் கண்டிருக்கிறது.