பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் புதிய உரை 427 பூதம் என்றால் பஞ்ச பூதம் என்றனர். உடலில் உள்ள மண், விண், தீ, நீர், காற்று என்னும் ஐந்தும் உள்ளுக்குள்ளே இகழ்ந்து சிரிக்கும் என்றும் உரை தந்திருக்கின்றனர். பூதம் என்றால் உயிர் என்றும்; கள் என்றால் மோசம் என்றும்; ஐந்து என்றால் பயப்படு என்றும் பொருள் உள்ளன. வஞ்சனையுள்ளவன் மனம் வஞ்சனை மனத்தின் வழியாகப், பொய், களவு, கபடம், சிறுமை, அடங்காத் தனம் போன்ற வற்றைச் செய்கின்ற உடல் . இந்த இரண்டையும் ஆற்றுப்படுத்துகிற ஆற்றுமா, அதாவது உயிர். அந்த உயிர்படும் வேதனையைத்தான் வள்ளுவர் இங்கே குறித்திருக்கிறார். கண்காணிப்பார் இல்லையென்பதால் தான், துறவிகள் பலர் கள்ளம் பல செய்கின்றனர். அவர்கள், தாங்கள் போட்டிருக்கும் போலிவேடத்தால், தங்களை விற்றுக் கொண்டு, பகலைக் கழிக்கும் பாதகர்களாக மாறிவிட்டனர். ஆகவே, பூதமாகிய உயிர் ஐந்தாகி அதாவது அஞ்சி பயந்து கள் எனும் அவனது மோசமான நிலையை எண்ணி, அகமாகிய உள்ளுக்குள்ளே, கூனிக் குறுகி, தாழ்ந்து இழிந்து, அவமானத்திற்குள்ளே அலை பாய்ந்து கிடக்கிறது. வஞ்ச மனத்தின் செய்யும் தவறுகளை, இன்ப நுகர்வுகளைக் கண்டு, அவனது உடலிலுள்ள ஐம்புலன்களும், உள்ளுக்குள்ளே சிரித்து மகிழும் என்றும் பொருள் சொல்லலாம். தீய செயல்கள் ஒருவனுக்குத் திருப்தி அளித்தாலும், அவனை கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று, தீய்த்துவிடும். இப்படித் தீயவனாக மாறியவன், தீய்ந்து போகப் போகிறானே என்று அஞ்சித்தான், உயிரானது அவமானத்தால் அடங்கிப்போய் இருக்கிறது என்று கூடா ஒழுக்கம் எவ்வாறு மன ஒருமையை மாய்த்து, மணி உடலைத் தீய்க்கிறது என்று முதல் குறளில் கூறியிருக்கிறார். 272. வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம் தான்.அறி குற்றப் படின்? பொருள் விளக்கம்: தன்நெஞ்சம் - தனது மனமும் உயிரும் தான் அறி - தான் கொண்டிருக்கிற உணர்வுகளில்