பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா சூரியன் எப்படி உலக வாழ்க்கைக்கு உதவுகின்றதோ அதுபோலவே மழையும் உதவுகின்றது என்பதால்தான் இந்த அதிகாரத்திற்கு வான்சிறப்பு என்று மகுடம் சூட்டி இருக்கிறார். 18. சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு பொருள் விளக்கம்: வானம் வறக்குமேல் = வானம் பொழியாது வற்றி விட்டால் ஈண்டு = இந்த மண்ணுலகின் சிறப்பு - செல்வம், இன்பம், மிகுதி மேன்மை போல எல்லாமே பூ - பூமியில்; சனை = நன்மைகளும் வான் ஒர்க்கும் = உயர்ந்த நினைவும் ஆய்வும் செவிச்செல்வமும் கூட செல்லாது - எதுவும் நடைபெறாமல் நலிந்து விடும். சொல் விளக்கம்: சிறப்பு - அருமை, அகங்காரம், உயர்ச்சி, அழகு, மிகுதி, மேன்மை; ஒடு - ஒடுக்குதல், ஒடுங்குதல்; பூ - பூமி, பிறப்பு சன் - நன்மையைக் காட்டுதல்; ஐ = உயர்ந்த தலைமை வான் = உயர்ச்சி; ஒர்தல்=ஆராய்தல், நினைத்தல், கூர்ந்து கேட்டல் முற்கால உரை: மழைபெய்யாதாயின் தேவர்களுக்கும் இவ்வுலகில் மக்களாற் செய்யப்படும் விழாவும் பூசையும் நடவாது. தற்கால உரை: மழை பெய்யாமல் போகுமானால், புகழ் நிலையர்களுக்கு இங்கு நடத்தப்படும் சிறப்பு விழாக்களோடு நாள்வழிபாடுகளும் நடைபெறமாட்டா. புதிய உரை: வான் பொழியாது வற்றிவிட்டால் இந்த மண்ணுலகில், செல்வம், மிகுதி, இன்பம், மேன்மை போலே எல்லாமே சுருங்கி விடும். பூமியில் நன்மைகளும், உயர்ந்த நினைவும், ஆய்வும், செவிச் செல்வமும் கூட நடைபெறாமல் நலிந்துவிடும். விளக்கம்: வானம் வற்றிவிடுகிறபோது பூமியில் வறுமை தொற்றிக்கொள்கிறது. வறட்சி காரணமாகப் பூமியில் செல்வம்

  • +. -- * o o சுருங்குகிறது. இன்பம் ஒடுங்குகிறது. மிகுதி குறைகிறது. மேன்ம்ை மறைகிறது. அழகு அழிகிறது. பூமியில் நன்மைகள் நடமாட