பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.34 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா விளக்கம்: எற்று எற்று என, இரண்டு முறை, இந்தச் சொல்லை, வள்ளுவர் பயன்படுத்தி இருக்கின்றார். எற்று எற்று என்றால் என்ன, எத்தன்மைத்து என்று இந்தப் பொருளை எடுத்துக் கையாண்டிருக்கின்றார்கள். வள்ளுவருக்கோ அளவில்லாத கோபம். ஞானிகள் போல நடிக்கும் மிருக மனிதர்களிடம். அவர்கள் வார்த்தைகளும் பொய். வாழ்க்கையும் சூதும் களவும். அவர்கள் தவறைத் தெரிந்து, தெளிந்து எந்தக் காலத்தில் மீண்டு வந்து வருந்தப் போகின்றார்கள். பொதுமக்களின் சுபாவம் என்ன? குண நலன்கள் என்ன? தூயவர்கள் என்று போலிவேடம் கட்டி, ஏமாற்றப் பட்டதைப் புரிந்து கொண்ட மக்கள் ஐயோ பாவம் என்று இரக்கப்படவா செய்வார்கள்? மகாத்மா போல மன்னித்தா விடுவார்கள் பாவியை விடாதே! போலியை விடாதே வெட்டு, குத்து, கொல்லு என்று பழிதீர்க்கவும், பாடம் கற்பிக்கவும் தானே முயல்வார்கள்! அத்தகைய பாமர மக்களின் உளவியலை நன்கு புரிந்திருக்கும் வள்ளுவர், தீமைகளுக்குத் தண்டனை நிச்சயம் உண்டு. அதுவும் உடனே கிடைக்கும் என்று, ஏதம் பலவும் தரும் என்பதாகக் குறிக்கிறார். பலவும் என்றால், அநேகமாக, ஒன்றுக்கும் மேற்பட்ட என்னும் பொருளில், துன்பங்கள் என்றால், எண்ணிக்கையில் அடங்காதவை ஏற்படும் என்று உண்மை நிலையை உரைக்கிறார். எற்று எற்று, அவர்களை உதை, எத்து, என்று கூறுகிற வள்ளுவர், தொடர்ந்து அடுத்த குறளிலும், தீயவர்களைக் கடுமையாகக் சாடியிருக்கிறார். 276. நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து வாழ்வாரின் வன்கணார் இல். பொருள் விளக்கம்: நெஞ்சில் துறவார் = புலன் வழி போகின்ற புன்மையாளர், நினைவில் துறக்காதவர், துறந்தார்போல் = எல்லாவற்றையும் துறந்தவர்போல