பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/439

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.38 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா வரவின் அளவு குறைகிறபோது, மனம் வாட்டுகிறது. வதைக்கிறது, பதைக்கிறது. அப்பொழுதுதான் மனசாட்சி பேசவும் ஏசவும் ஆரம்பிக்கிறது. அது அந்த மாய மனித மிருகத்தை ஆன்மாவானது அலைக்கழிக்கிறது. பாழும் பொருளின் மேல், பற்று கொண்ட பாவியை, ஆன்மாவானது நஞ்சாக மாறி, அவரது உடல் மனத்தை வருத்துகிறது. ஆசையின் காரணமாக கீழ்மக்களாகிப் போனதால், அவர்களை உடைத்து அழிக்கிறது. கீழ் மக்களாக மாறிப்போனவர்களை உடைத்து அழிக்கும் அற்புத மருந்தாக, அவரது ஆன்மாவே அனைத்தையும் செய்து விடுகிறது என்னும் அற்புத தத்துவத்தை, வள்ளுவர் கூறியிருக்கிறார். குன்றி மணியின் சிவப்பு நிறம்போல தோற்றமும், அதன் கருமைபோல மனமும் என்று மற்றவர்கள் பொருள் கொண்டாலும், அருந்துறவிகளின் இறைவன் ஆன்மா என்பதை, வள்ளுவர், Ꮗ J ❍Ꭲ ᏞᏝ) fᎢ ❍Ꭲ நெறியாக இங்கே வகுத்துக் காட்டியிருக்கிறார். 278. மனத்தது மாசாக மாண்டார் நீராடி மறைந்தொழுகு மாந்தர் பலர். பொருள் விளக்கம்: நீர் ஆடி = தண்ணிரும் காற்றும் மறைந்தொழுகு = தெரிந்தும் மறைந்தும் ஒழுகி உதவுவது போல மாந்தர் பலர் = பல மனிதர்களும் மனத்ததுமா = மனத்திலே உள்ள (தீய) வலிமையானது சாக = அழிந்து போக, மாண்டார் = பெரியோர்களாக மாற்றி உதவியது. சொல் விளக்கம்: மா - வலி, சாக - அழிய, மாண் = மாண்பு, தார் படை மாந்தர் - மனிதர்; ஒழுகு தொடர்ந்து நெறிப்பட நிற்றல் முற்கால உரை: மாசு தம் மனத்தின் கண்ணதாக இருக்க, பிறர்க்குத் தவத்தான் மாட்சிமை உடையாராய். நீரில் மூழ்கிக் காட்டி அதன் கண்ணே மறைந்து செல்லும் மாந்தர் பலர் உள்ளனர்.