பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/441

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா கூடா ஒழுக்கத்தையே குறித்துக் காட்டி வந்த வள்ளுவர். நல்ல ஒழுக்கத்தினை வளர்க்கும் இயற்கை சக்திகள் உள்ளன. அதனைப் பயன்படுத்தி, ஆற்றல் மிக்கவர்களாக வாழ்ந்திட வேண்டும் என்று 8 வது குறளில் வழிகாட்டுகின்றார். 279. கணைகொடிது யாழ்கோடு செவ்விதாங் கன்ன வினைபடு பாலால் கொளல் பொருள் விளக்கம்: யாழ்கோடு - ஆந்தை வஞ்சனையானது. கணைகொடிது - அதன் ஒலியும் கொடுமையானது. செவ்விதாங்கன்ன - அந்த ஆந்தையின் தன்மை போலவே, வினைபடு = மறைந்து வாழும் பொய் வேடத்தாரின் எண்ணம், செய்கையின் பொல்லாங்கினை. பாலால் கொளல் = (அவரது) குணத்தால் கண்டு கொள்ளலாம். சொல் விளக்கம்: யாழ் - ஆந்தை, வீணை, கோடு - வஞ்சனை, கொடுமை, நடுநிலை நீங்குகை; கணை - ஒலி, அம்பு வினை = கருத்து, செய்கை பொல்லாங்கு பால் = இடம், குணம், கடமை, உரிமை. முற்கால உரை: அம்பு வடிவாற் செவ்விதாயினும், செயலால் கொடியது. யாழ் கோட்டால் வளைந்ததாயினும், செயலாற் செவ்விது. அவ்வகையே தவம் செய்வோரையும் கொடியர் செவ்வியர் என்பது வடிவாற் கொள்ளாது, அவர் செயல்பட்ட கூற்றானே அறிந்து கொள்க. தற்கால உரை: நேராக அமைந்த அம்பும் கொடுமை செய்யும். ü) ] Gö☽ ❍ ☾) ! ᎢᎦᏂ அமைந்த யாழும் இனிமை செய்யும். அவற்றைப் போல, தவத்தினரையும் அவரவர் செயல் நிலையால் அறிந்து கொள்க. புதிய உரை: இருட்டில் மறைந்து வாழும் ஆந்தை வஞ்சனை நிறைந்தது. அதன் குரலும் கூட கொடுமையானது. அதைப் போலவே, பொய்த் துறவியரின் தோற்றம் மட்டுமன்று; அவரது எண் னம் செய்கை வா ழ்க் கை எல்லாமே கெ ாடுமையானது என்று அ வர் குணத்தாலே கண்டு கொள்ளலாம்.