பக்கம்:திருக்குறள் புதிய உரை.pdf/445

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 29. கள்ளாமை தவநெறியில் வாழ்கிறவர்களுக்கு, கூடா ஒழுக்கம் கூடாது என்று கூறிய வள்ளுவர், கூடாத ஒழுக்கத்திற்குக் கூட்டிக் கொண்டு போகிற கவர்ச்சியைக் கொண்டது களவுதான் என்று எண்ணிய காரணத்தால், கூடா ஒழுக்கத்திற்குப் பிறகு, கள்ளாமை என்னும் அதிகாரத்தை வைத்திருக்கிறார். கள்ளாமை என்றால் களவு செய்யாமை என்று பொருள். களவு என்பது பஞ்சமா பாதகத்தில் ஒன்று. அதைப் பெரும்பாவம் என்றும், துரோகம் என்றும் பிரமித்துப் பேசுவார்கள். பெரும் பாவம் என்பது கொலை, பொய், கள வுெ, கள்அருந்துதல், குருநிந்தை எனும் ஐம்பெரும் குற்றங்களாகும். களவு என்பதற்குப் பிறர் பொருளை அனுமதியின்றி மறைவாகக் கவருதல் என்று விளக்கம் அளிக்கின்றார்கள். கள் என்பதற்குப் பொய், மோசம், களவு, கஞ்சா என்றும் கூறுகின்றார்கள். ஆக, கள் என்றால் மனத்தால் வவ்வுதல் உடலால் கவ்வுதல் என்றும் கொள்ளலாம். அடுத்தவர்கள் பொருள் மீது அவாவுதல். அவாவியதால், மனம் கறைபட்டுக் குன்றிப்போக, உடலோ அதைப் பிறர் அறியா வண்ணம் பறிப்பதற்காக ஒழுக்கத்தில் கன்றிப்போக, பாதகச் செயல் நடந்தேறி விடுகிறது. ஆகவே, பாதகச் செயலுக்குப் போகின்ற கள் எனும் களவை, கொள்ளாத மெய் கொண்டவர்களாக, துறவியரும், அவரது ஆன்மிக வழியால் ஒழுகும் இல்லறத்தாரும் கள்ளாமெய் கொண்டவர்களாக வாழ வேண்டும் என்னும் எண்ணத்தோடுதான் வள்ளுவர் கள்ளாமெய் என்று இந்த அதிகாரத்திற்குப் பெய்ர் சூட்டியிருக்க வேண்டும். துறவியருக்குத் தூய மனம் வேண்டும் என்றால், தீய குணம் தொலைய வேண்டும். தீய குணத்தைத் தேக்கிக் கொண்டிருக்கும் மனத்தின் வலிமை சாக வேண்டும். i گي o i #. "-- 1 . ஆந்தை போல வஞ்சனையுடன் காந் தொழிகின்ற கீழ்மை அனபு மெ ாழி யில்லாமல் ஆநதை போல் 3լoՆ) றி நிற்கு LI) இழிநி ©Ꮌ☽ ❍